Tuesday, November 16, 2010

கோவை கொலை


சென்ற வாரம் என் நண்பன் உடைய திருமனத்திற்கு பொள்ளாச்சி சென்றிருந்தேன். அங்கு கோவையை சேர்ந்த சில நண்பர்களையும், அந்த மாவட்டத்தை சேர்ந்த சில மக்களையும் சந்திக்கும் வாய்பு எனக்கு கிடைத்தது. கோவையில் அந்த குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவம் எல்லோரிடமும் ஒரு தாகத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. கொலை செய்தது மட்டும் இன்றி அந்த சிறுமியை வன்புணர்ச்சி செய்தது மக்களை மிகவும் கொதிபடைய வைத்திருகிறது. 

இது போன்ற என்னற்ற சம்பவம் சென்னை போன்ற நகரங்களில் மிக சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்  ஆசிரியர்களால், வேன் டிரைவர்களால், பள்ளி மாணவர்களால் எதோ ஒரு வகையில் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாக படுவதாய் நாம் தினந்தோறும் செய்தி தாளில் படித்து கொண்டு இருக்கிறோம். சென்னை போன்ற ஊர்களில் அடுத்தவருக்கு நடந்தால் அது செய்தி நமக்கு நடந்தால் அது கஷ்டம் என்ற மனபான்மைய்லே நாம் உள்ளோம். கோவை ஒரு கூட்டு குடும்பம் போன்ற அழகான ஊர் என்பதால் அங்கே மக்கள் இடத்தே இந்த கொலை ஒரு பெரிய கிளர்ச்சியி ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த குழந்தைகளின் இறுதி ஊர்வலத்திற்கு ஐந்தாயிரம் பொது மக்கள் கலந்து கொண்டார்கள் என்றும், அந்த கொலைக்கு காரணமாக என்கவுண்ட்ட செய்யப்பட்ட டிரைவர் மோகன்ராஜின் பிணத்தை அவனது சொந்த ஊரில் அனுமதிக்க மறுத்தார்கள் என்றும், என்கௌன்ட்டர் செய்ததை விட சித்ரவதை செய்து உயிருடன் அவனை விட்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொனதை கேட்க நேரிட்டது.

இப்பொழுது சமூக ஆர்வலர்களும், மனித உரிமை போராளிகளும் சட்டபடி தீர்ப்பு வரும் முன் ஒருவரை கொலை செய்தது தவறு என்றும். அப்படியே அவன் தவறு செய்தால் கூட, குற்றவாளி தவறு செய்த காரணங்களை அறிந்து அதனை களைவதற்கான முயற்சியை தான் செய்யவேண்டும் என்றும் கூறுகின்றனர். இது திருட்டு, உணர்ச்சி வசப்பட்டு செய்யும் கொலைகள் போன்றவைகளுக்கு பொருந்துமே ஒளியே சிறுமி என்று கூட பாராமல் வன்புணர்ச்சி செய்த ஒரு மிருகத்துக்கு எப்படி பொருந்தும் என்பது எனக்கு புரியவில்லை.  

என் குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் கூட செய்யும் வேலையில் கவனம் சிதறி போகும் எனக்கு, அந்த பெற்றவர்கள் பட்டிருக்கும் ஒரு ஒரு நொடி வேதனையும், குழந்தை எப்படியும் கிடைத்து விடும் என்ற நப்பாசையும், அது சிதறி போகும் கொடுமையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு எந்த மாதிரி நம்பிக்கையை இந்த சமுதையம் இனி வழங்க முடியும்? குற்றவாளியின் மரணம் தான் இதற்கு ஒரே தீர்வு. இது அவர்களுக்கு இறந்து போன குழந்தைகளை திருப்பி தராவிட்டாலும் ஒரு மன அமைதியை ஏற்படுத்த உதவும்.

மரண தண்டனை இருந்தும் கொலை குற்றங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, அதே போல் இந்த என்கவுன்ட்டர் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, ஒரு சில மாதங்களுக்கு ஒரு தாகத்தை ஏற்படுத்தும் மற்றபடி இது  போலீசின் கையில் இன்னுமொரு பலமான அயுதத்தை கொடுக்கும் என்று சொல்லும் பெரியவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்முறை  நடக்கும் இந்த சமுதாயத்தில் ஒரு மாதம் அமைதி இந்த என்கௌன்ட்டர் ஏற்படுத்தும் என்றால் அதுவே எனக்கு நிம்மதியை கொடுக்கிறது. 

குற்றம் செய்த சில மாதங்களுக்கு உள்ளாகவே தீர்ப்பு கொடுத்து தண்டனை நிறைவேற்றும் வரை இது போன்ற என்கௌன்ட்டர் அவசியம் என்றே தோன்றுகிறது.

இருந்தும் இந்த என்கௌன்ட்டர் ஒரு சில அரசியல் உள்நோக்குடன் நடந்தது என்பதை மறுக்க முடியாது. உயர் பதவியில் இருந்து தவறு செய்யும் அதிகாரிகளை விட்டு, ஒரு பின்னணியும் இல்லாத குற்றவாளியை போட்டு தள்ளியது சாதனை அல்ல.

ரத்தோர் போன்ற அதிகாரிகள் சட்டத்தின் ஓட்டையை பயன் படுத்தி வெளிய வரும் பொழுது அவர்கள் உதிர்க்கும் புன்னகை அருவருப்பாக இருக்கிறது. 






1 comment: