Wednesday, November 10, 2010

தமிழ் சினிமா - வரி விலக்கு

"ஒச்சாயி"நு ஒரு படம் ரிலீஸ் ஆச்சு, இதுல என்ன சிக்கல்னு பாத்திங்கன இது தமிழ் பேரா? இதுக்கு வரி விலக்கு குடுக்கலாமா வேண்டாமா? இது தான் பிரெச்சனை. ஒத்தாண்டம்மன் - ஒச்சாண்டம்மனாகி, அதிலிருந்து மறுவியப் பெயர் ஒச்சாயி, இப்படி விளக்கம் எல்லாம் குடுகரங்க.

இத விடுங்க "வ குவாட்டர் கட்டிங்" அப்படினு ஒரு படம் வந்திருக்கு, இது தமிழ் பேரம் அதுனால இதுக்கு வரி விலக்கு உண்டாம். இப்படி ஒரு வார்த்தை கேள்வி பட்டது இல்லையே அப்படின்னு மண்டைய ஒடச்சு அகராதி எல்லாம் தேடின பிறகு தான் இது கெடச்சுது

கைநாடி கசிந்துரகி டாஸ்மாக் அருகில்
வ குவாட்டர் கட்டிங்

                   - (கீ மு 1805) அய்யன் வரே வ சேட்ஜி, 
                      மேட்லி சப்வே. 


தமிழ்ல படம் பேரு வைத்தால் வரி விலக்குனு சொன்னதும் எதாவது ஒரு பேரு வைக்க வேண்டியது ஆனா படம் பூர இங்கிலிஷ்ல பேச வேண்டியது. கெளதம் மேனன் இருக்காரே  அவரு தான் இதுக்கு குரு. அவரு படத்துல பாதி வசனம் இங்கிலிஷ்ல தான் இருக்கும் ஏன்னு கேட்டா, "ஐ அம் இன் லவ் வித் யு " என்ற வசனத்தை தமிழ்ல சொன்னா கொச்சையா இருக்காம். ஏன் இருக்காது நம்ம தான் "மயிறு"ன்ற வார்த்தைய கெட்ட வார்த்தை அகிட்டோமே.

No comments:

Post a Comment