எனது நண்பனின் மனைவியின் பிரசவத்தின் போது இந்த நோயாய் பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு தாய் நெகடிவ் இரத்தப் பிரிவாகவும் அவருக்கு பிறக்கும் குழந்தை பாசிடிவ் இரத்தப் பிரிவாகவும் இருந்தால் இந்த நோய் தாக்குவதற்கான சாத்தியம் அதிகம்.
இந்த நோய் எப்படி வருதுன்னு பார்தீங்கனா , குழந்தை பிறக்கும் போது குழந்தையோட பாசிடிவ் இரத்தம் தாயோட நெகடிவ் இரத்ததோட கலந்திடுது. தாயோட உடம்பு உசாரா என்ன பண்ணுது, சிவப்பு அணுகலை கொள்ளும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி புதுசா கலந்த இரத்ததோட சண்ட போட்டு அத அழிக்க பாக்குது, இது எல்லாமே குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நடக்கறது. அதுனால அண்ணனுக்கோ, அக்காவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, இனிமேல் பிறக்கபோகும் தம்பிக்கோ, தங்கைகோ தான்(இதுனால தான் என்னவோ பிண்ணாடி தம்பி செஞ்ச தப்புக்கு அண்ணன் அடிவாங்கறான்).
சரி மேட்டருக்கு வருவோம், தாய் அடுத்து கருவுறும் போது ஏற்கனவே இருக்கும் எதிர்ப்பு அணுக்கள் மிச்ச மீதி இருந்தா அது தொப்புள் கொடிவழியே அடுத்த குழந்தையின் உடம்பிற்குள் செல்லும். அங்க போய் குழந்தையோட சிவப்பு அணுகலை தாக்க ஆரம்பிக்கும். இதனால் பிறக்கும் குழந்தை இரத்த சோகை நோயுடன் பிறக்கலாம், இன்னும் தீவிரமாக இருந்தால் குழந்தை இறந்தே பிறப்பதற்கான சாத்தியமும் உண்டு.
இதை தடுக்க, முதல் குழந்தை பிறந்தவுடன் Anti-D என்ற தடுப்பு ஊசி போட வேண்டும். தாய், சேய் இருவரும் நெகடிவ் பிரிவாக இருந்தால் எந்த தொல்லையும் இல்லை.
Do you like it? If yes don't forget to vote for it.