Monday, January 9, 2012

BOAZ பப்ளிக் ஸ்கூல் அனுபவம்

ஜனவரி 2 ஆம் தேதி Pre.K.G விண்ணப்ப படிவம் தரப்படும் என்று கேள்விப்பட்டவுடன் அந்த பள்ளிக்கு சென்று விசாரித்தேன், விடிய  காலையிலேயே வந்திடுங்கன்னு வாட்ச்மேன் சொன்னபோ என்னடா ஓவர் பில்டப்பா இருக்கேனு நெனச்சேன். ஆனா உண்மை அது தான், காலைல 5.30 மணிக்கு அவசர அவசரமா கிளம்பி போனா எனக்கு கெடச்சது 50ஆம் நம்பர் டோக்கன்.  முதலாவதா நின்னுட்டு இருந்த ஒரு பெரியவர் கிட்ட நீங்க எத்தன மணிக்கு வந்தீங்கன்னு கேட்டேன், தம்பி நான் 4 மணிக்கெலாம் வந்துட்டேனு சொன்னாரு.

8.45 மணிக்கு ஸ்கூல் ஆரம்பமாகும், 9.30 மணிக்கு விண்ணப்பம் தருவங்கனு ஒருத்தர் சொன்னாரு. நல்ல வேலை குமுதம், விகடன் எடுத்துட்டு போனதால பொழுது போச்சு. 6.30 மணிக்கு வரிசை பெரிதாகி கொண்டே போனது, ஒரு பெரியவர் அங்கிருந்த வாட்ச்மேனுடன் கதவை திறந்து உள்ளே விடும் படி சண்டை இட தொடங்கினார். அதற்கு வாட்ச்மேன் மறுத்ததால் கொஞ்சம் அமலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மக்கள் தொலைகாட்சி அங்கு வந்து வரிசையில் நின்றவர்களுடன் பேட்டி எடுத்தது. வெளியே மக்களை நிறுத்தி வைத்திருப்பது பள்ளியின் விளம்பரத்துக்காக என்று சிலர் பேட்டி குடுத்தனர்.

நேரம் செல்ல செல்ல அந்த வழியே போற பெர்சுங்க எல்லாம் எதுக்கு வரிசையில் நிற்கறீங்க என்று கேட்க ஆரம்பித்தார்கள். இளநீர் விற்பவர், டீ விற்பவர் அங்கு வந்ததால் திருவிழா கோலம் ஆனது. சாப்ட்வேர் கம்பனிக்கு வேளைக்கு போகும் வருங்கால பெற்றோர்கள் எங்கள போட்டோ வேற எடுத்துட்டு போனாங்க.

ஒரு வழியா 9.30 மணிக்கு கதவை திறந்து உள்ளே அனுமதித்தார்கள் . ஒரு சில சந்தேகம் இருக்கு அப்படின்னு சொன்னா, முதல்ல 500 ரூபாய் குடுத்து ரெஜிஸ்டர் பண்ணுங்க அதுக்கு அப்புறம் ஆபீஸ்ல உங்க சந்தேகத்த கேட்டு தீர்த்துகங்கனு சொன்னாங்க. நானும் ரெஜிஸ்டர் செய்துவிட்டு, என் பையனுக்கு இப்போ 2 வயது ஆகிவிட்டது, இந்த வயது போதுமானதா என்று விசாரித்தேன். அந்த போர்ட படிச்சு பாருங்க என்று சொன்னார். அதில் Pre.K.G   சேர்வதற்கு மார்ச் மாதம் 2.5 வருடம் முடிந்திருக்க வேண்டும், L.K.G சேர ஜூன் மாதம் 3 வயது முடிந்திருக்க வேண்டும் என்று குறிபிட்டு இருந்தது. என் மகன் ஜூன் மாதம் தான் 2.5 வருடம் முடிப்பான் என்ன செய்ய என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினார். சரி என் 500 ரூபாய்யாவது திருப்பி கொடுங்கள் என்றேன் அதுவும் முடியாது என்று கூறிவிட்டனர்.

எனக்கு பின் வந்த இனோருவரும் இதையே கேட்டார், அதற்கு அவர்கள் உங்கள் பையன் ஒன்னுக்கு, ரெண்டுக்கு வந்தால் சொல்ல தெரியுமா என்று கேட்டார்கள், அவரும் ஓ சொல்லுவானே என்றார். சரி நீங்கள் நேர்காணலுக்கு வாருங்கள் என்று தெரிவித்தனர்.

என் பையனும் வரும் முன் சொல்வானோ இல்லையோ வந்த பின் கட்டாயம் ஜட்டியை கழட்டி போட்டு ஓடிருவான்,  சரி நாமும் நேர்முகத்திற்கு வந்து தான் பார்போம் என்று முடிவு செய்தோம். மறு நாள் காலை 9.30 மணிக்கு நான், என் மனைவி என் பிள்ளை மூவரும் வந்தோம். பள்ளி வளாகத்தில் அமர்திருந்தோம், ஒரு மணி நேரம் கழித்து உள்ளே வர சொன்னார்கள், அங்கே என் பையனின் வயதை கேட்டு விட்டு அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள், நான் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் அவன் 3 வயது கடந்து L.K.G காண வயது வரம்பை பெற்று விடுவான் என்று கூறினேன். அதை கேட்க மறுத்து எங்களை அனுப்பி வைத்தனர். Pre.K.G இடம் கிடைக்க வில்லை என்றால் L.K.G இடம் கிடைப்பது மிகுந்த சிரமம் என்று நண்பர்கள் ஏற்படுத்திய பீதியால் மிகுந்த பயத்துடன் வீடு சென்றோம். 


Do you like it? If yes don't forget to vote for it.

No comments:

Post a Comment