பீகார் மாநிலத்தில் ஒரு 4 வயது குழந்தை கணக்கு வராத காரணத்தினால் ஆசிரியரால் அடித்து பார்வை இழந்து விட்டான். என்னதான் நடக்குது நம்ம நாட்டுல? 4 வயசு குழந்தை நல்லா பேசினாலே சந்தோஷ படனும், கணக்கு வரலைன்னு அடிக்கறது ரொம்ப அதிகப்படியா இருக்கு. தோனி, 3 idiots , Taare Zammen Par இப்படி 1000 படம் வந்தாலும் அதை படமாக மட்டுமே பார்த்து, இதுல த்ரிஷா நடிச்சிருந்த நல்லா இருக்கும் மச்சி, சந்தானமும் தோணில இருந்திருந்த செம காமெடியா இருந்திருக்கும் மச்சின்னு அலைய வேண்டியது தான்.
நான் படிச்சா பள்ளில 2 கால் பந்தாட்ட மைதானம், 2 ஹாக்கி மைதானம், 1 கூடை பந்து மைதானம் இருந்தது, அவ்ளோ பெரிய இடம் இன்றைக்கு இருந்தால் அதுல 8 பள்ளிக்கூடம் கட்டி நன்கொடைய கறந்திருவாங்க . ஒரு குழந்தைக்கு படிப்புல தான் ஆர்வம் இருக்கும்னு சொல்ல முடியாது, விளையாட்டில் இருக்கலாம் , ஓவியத்துல இருக்கலாம் , கலைல இருக்கலாம் அத கண்டுபிடிக்கிற முயற்சியை தான் பள்ளியும், ஆசிரியர்களும் செய்யணும்.
இன்றைக்கு இருக்கிற ஆசிரியர்களோட நிலைமை என்ன? நீ பெண்ணா? நல்லா படிக்கலையா? டீச்சர் ட்ரைனிங் போ. உனக்கு வேலை கிடைக்கலையா? ஆசிரியரா போ . ஆசிரியரே மனப்பாடம் பண்ணி வகுப்பு எடுக்கும் போது, குழந்தை எப்படி புரிஞ்சு படிக்கும்?
கணிதத்தில் 9 ஆம் வாய்பாடு வரை தெரிந்தால் போதும், அதுவும் 5 * 2 = 10 என்று மனடபட்ம் செய்வதை விட ஐந்தை இரண்டு முறை கூட்டினால் பத்து என்று தெரிந்தாலே போதுமானது.
வரலாற்றில் பானிபட் போர் நடந்த வருடத்தை விட அந்த போர் எதனால் நடந்தது, அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்தால் போதுமானது.
அதை விட்டுவிட்டு speed maths, memory techniques கற்று தர தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறோம்.
பள்ளித் தேர்வுகளிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதிகமாக, வேகமாக , உள்ளதை உள்ள படி எழுதினால் தான் அதிக மதிப்பெண் என்ற நடைமுறையை மாற்ற வேண்டும். பக்கம் பக்கமாக எழுதுவதை விட, முக்கியமான விஷயங்களை மட்டும் புள்ளி விவரமாக எழுதினால் போதுமானது.
கணிதத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பயன்படும் அணைத்து சூத்திரங்களையும் வினா தாளிலேயே தந்துவிட வேண்டும். எந்த சூத்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் தெரிந்தாலே போதுமானது.
அணைத்து பாடத்திற்கும் செய்முறை பாடம் இருத்தல் அவசியம், அதை முதல் வகுப்பில் இருந்தே செயல் படுத்த வேண்டும். எழுத்து தேர்விலோ அல்லது செய்முறை தேர்விலோ எதில் ஒன்றில் தேர்ச்சி பெற்றாலோ அந்த மாணவன் தேர்ச்சி பெற்றதாக கருத வேண்டும். 7 ஆம் வகுப்பு வரை தேர்வே தேவை இல்லை.
ஒரு மாணவனுக்கு எல்லா பாடத்திலும் ஆர்வம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற வில்லை என்றால் அவன் முட்டால் அல்ல. பொது தேர்வில் ஒரு மாணவன் கணிதத்தில், இயற்பியலில் தேர்ச்சி பெற்று உயிரியலில் தேர்ச்சி பெறாமல் போனால் அவனை மறுபடி அதே வகுப்பில் படிக்க வைப்பது கொடுமை. தேவை பட்டால் அவன் உயிரியல் மட்டும் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறட்டும். அப்படி அவனுக்கு அதில் ஈடுபாடு இல்லை என்றால் அவன் பொறியியல் படிக்கட்டும். அனைத்திலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தை மாற்ற வேண்டும்.
பள்ளி என்பது ஒரு மாணவனுக்கு வெவ்வேறு படிப்பினை அறிமுக படுத்தி அவனின் ஆர்வத்தை தூண்டுவதும், கண்டரிந்தலும், சமுகத்தில் பழகுவது, ஒழுக்கம், நட்பு, விளையாட்டு, கலை போன்றவற்றை கற்று கொடுபதற்கு தான்.
பெற்றோர்களே உங்கள் மகன் எதாவது ஒன்றில் ஆர்வமாக இருப்பான் அதை கண்டுபிடித்து அதில் அவனை சாதிக்க ஊக்க படுத்துங்கள். மருத்துவமும், பொறியியலும் மட்டுமே படிப்பு அல்ல. படிக்கச் வில்லை என்றாலும் தவறு இல்லை நேர்மையாக இருக்க கற்றுகொடுங்கள், செய்வதை ரசித்து செய்ய சொல்லி தாருங்கள்.
பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த கல்லூரில படிச்சாங்க?
பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த கல்லூரில படிச்சாங்க?
Do you like it? If yes don't forget to vote for it.
No comments:
Post a Comment