Sunday, November 19, 2017

மீண்டும் மதவாதம்

“The unintended consequence of the Modi economy is that the weak are being culled, and the strong given space to grow to their true potential.- Modinomics”
ஸ்வராஜ்யா  என்ற வலது சாரி பாஜக ஆதரவு இணையத்தளம் சமீபத்தில் மோடினோமிக்ஸ் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது இணைப்பு. அதன் சாரம் GST, Demonitisation (பணமதிப்பிழப்பு) போன்றவை நலிவுற்றவர்களை அழித்து வலுவானவர்களை  வளர்ந்து இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு இட்டு செல்லும் என்பதே. அதற்கு அவர்கள் மேற்கோள் காட்டுவது டார்வின் தர்கமான “Survival of the fittest”, ஒரு பாசிச தத்துவத்தில் ஊறியவர்களால் மட்டுமே இப்படி சிந்திக்க இயலும். அந்த கட்டுரையில் வரும் ஒரு பகுதியை பார்ப்போம்
“In the political brouhaha over demonetisation and the implementation of the goods and services tax (GST), the attack on the government has been postulated on this same premise – that the weak are in pain. The informal sector is in trouble, small businesses are going bust, small-scale farmers are committing suicide.
While there is no question that human beings must be protected from the vagaries of nature’s furies or governmental follies, society as a whole is not benefited by allowing weak and unprofitable entities and sub-optimal businesses to survive.”
GST, பணமதிப்பிழைப்பு போன்றவற்றல் சிறு தொழில் செய்வோர், அமைப்புசாரா தொழில் செய்வோர் பெருமளவு பாதிக்க படுகின்றனர், குரு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவை வருந்தத்தக்கதே ஆகும் எனினும் சமுதாயம் முன்னர் இது அவசியமே.
ஹிட்லரின் அடிப்படை தத்துவத்திற்கு ஒத்த தத்துவம் இது.
Eugenics (இனமேம்பாட்டியல்) என்ற தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஹிட்லர், “மிகவும் பலவீனமானவர்கள் தங்கள் வம்சத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட கூடாது. அப்படி நாம் செய்ய முற்படும் பொழுது அதன் விளைவாக மிகவும் குன்றிய ஒரு சந்ததியை நாம் உருவாக்கி விடுவோம். அதன் விளைவாக ஆரோக்கியமுடன் இருக்கும் சந்ததி அவர்களின் உழைப்பின் பெரும்பகுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் நலிவுற்றவர்களை பேணிக்காப்பதற்கு செலவிட நேரிடும், இதன் காரணமாக இந்த இனம் மிகவும் பின்தங்கிவிடும்”
ஆரிய வம்சம் தழைக்க உடல் ஊனமுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோரை கொன்று ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தை கொண்டிருந்தார். 1939 ஆம் ஆண்டு T4 என்ற ரகசிய அமைப்பை ஹிட்லர் தொடங்கினர், இந்த அமைப்பு சுமார் 375000 குறையுள்ள ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கிறது. இன படுகொலையின் போது யூதர்களுக்கு முன் ஆரிய வம்சத்தில் உள்ள குறைபாடுள்ள ஆட்களையே முதலில் கொன்றனர். மிகுந்த விமர்சனங்களுக்கு பிறகு 1941ஆம் ஆண்டு  இந்த அமைப்பை ஹிட்லர் மூடும்  பொழுது சுமார் 275000 குறைபாடு உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்களை  கொன்று முடித்திருந்தது இந்த அமைப்பு.
மனநலிவு நோய் , கை கால் ஊனம், முடக்குவாதம் போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு கெமிக்கல் மருந்து பாய்ச்சி கொன்று குவித்தனர், சாவிற்கான கரணம் நிமோனியா என்று பதிவு செய்து உடலை அடக்கம் செய்தனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்  பாதிக்க படுவது எதிரியான யூதர்கள் மட்டும் இல்லை, அவர்கள் இனத்தை சேர்ந்த ஆரியர்களுமே. தேச நலனை காரணம் காட்டி தங்கள் இனத்தை வைத்தே அவர்களில் உள்ள நலிவுற்றவர்களை அழித்தனர்.
சமீபத்தில் ப்ளூ வேல் என்ற இணைய விளையாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, Philipp Budeikin என்ற நபர் இதை உருவாக்கிய காரணத்திற்காக  கைது செய்யப்பட்டார். அவர் கூறுகையில் இந்த விளையாட்டின் மூலம் இந்த உலகத்தில் வாழ தகுதியுற்றவர்களை அழித்து  தூய்மை படுத்துவதே இந்த விளையாட்டின் நோக்கம்  என்று தெரிவித்தார்.
500 ரூபாய் 5 வட்டிக்கு கடன் வாங்கி அதனை வைத்து பொருள் வாங்கி விற்று இரவு அந்த கடனை அடைத்து மீண்டும் அடுத்தநாள் கடன் வாங்கி உழைக்கும் எண்ணற்ற வியாபாரிகள் இருக்கின்றனர், அவர்கள் வியாபாரம் ஒரு நாள் தடைபட்டாலே அவர்கள் பலமடங்கு வட்டி மட்டும் கட்ட நேரிடும். பணமதிப்பிழைப்பு போன்ற நடவடிக்கையின் போது பணத்தட்டுப்பாடால் நிச்சயம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பர். திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் பல சிறிய வியாபாரம் திரும்பி எழ முடியாத அளவு வீழ்ச்சி அடைந்தது. பொருளாதாரம் சீரடையும் போது கிடைத்தது போதும் என்று தங்கள் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டு ஓடியவர்கள் பலர். இதை தான் இந்த அரசாங்கம் எதிர்பார்கிறதா?
ஒரு பத்திரிகையின் கருத்திற்கு அரசாங்கம் எப்படி  பொறுப்பாகும் என்று கேட்கலாம்? ஆனால் பாஜக அரசு அப்படி பட்ட அரசல்ல. தங்களை சுற்றி எப்பொழுதும் உதிரி அமைப்புகளை (Fringe Elements ) வைத்து கொண்டு அரசியல் செய்யும் கட்சி. அவர்கள் தான் RSS கொள்கைகளை முதலில் சிறிய அளவு பரப்பி ஆழம் பார்ப்பார்கள், அது எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்ன மாதிரியான எதிர்வினை வருகிறது என்று ஆராய்ந்த பின் அதனை அரசு செயல்படுத்தும். பெரும்வாரியான எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி கொள்ள ஏதுவான ஓர் ஏற்பாடு .
இதை ஒத்த மற்றொரு மிக முக்கிய நிகழ்வு அதே சமயத்தில் நடக்கிறது இந்த இரண்டு நிகழ்வுகளையும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் அரசாங்கத்தின் கொள்கையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அக்டோபர் 5ஆம் தேதி  இந்திய பொருளாதார மாநாட்டில்  ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் பாரதி என்டர்ப்ரைஸ் தலைவர் சுனில் மிட்டல் ஒரு மிக முக்கியமான புள்ளி விபரத்தை அளிக்கிறார், அதாவது கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் 200 முன்னணி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றும் வரும் வருடங்களில் தேவையான வேலை வாய்ப்பினை உருவாக்க முடிய வில்லை எனில்  இந்த சமூகம் பின் தங்கிவிடும் என்று கூறுகிறார். அப்பொழுது குறுக்கிட்டு பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஒரு முத்தான கருத்தை உதிர்கிறார், பணிஇடைநீக்கம் மற்றும் வேலையின்மை  நல்லது. பணி இழந்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருமாறி வேலை வாய்ப்பினை உருவாக்குவார்கள் என்று கூறுகிறார். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு இருக்கும் பொறுப்பு உணர்ச்சி கூட சற்றும் இல்லாத பேச்சு இந்த மத்திய அமைச்சருடையது.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 2013-14, 2015-16 ஆண்டுகளில் negative job growth உருவாகி உள்ளது  இணைப்பு . 2020ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேர் படிப்பு முடித்து வேலைக்கு தயாராக இருப்பார்கள் என்றும், வேலைக்காக காத்திருப்போரின்  சராசரி வயது 29 ஆக இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இன்னும் மூன்று வருடங்களே இருக்கும் நிலையில் அதற்கு அரசாங்கம் எவ்வளவு முனைப்புடன் செயல்பட வேண்டும்? அதற்கு முதல்படி வேலை இன்மை என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தீர்வை விவாதிப்பது. அதை விடுத்து தலையை மணலில் புதைத்து கொண்டு, வேலை இல்லாவிட்டால் நல்லது என்று சொல்வது எவ்ளவு அயோக்கியத்தனம்?  இதற்கும் மேல் சொன்ன கட்டுரையின் சரத்திற்கும் பெரிய வேறுபாடு என்ன?
சரி வேலை இல்லாதோர் தொழில் முனைவோர் ஆகுங்கள் என்று சொல்கிறார், தொழில் முனைவோரின் நிலைமை என்ன? 2015 ஆம் ஆண்டு 110 ஸ்டார்ட்அப் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது, 2016ஆம் ஆண்டு அது 212 ஆக உயர்ந்துள்ளது . அந்நிய முதலீட்டின் உதவியுடன் ஆரம்பிக்க படும் இந்த நிறுவனங்களுக்கே இந்த நிலைமை இதில் வேலை இழந்த அனைவரும் தொழில் முனைவதாம். 29 வயதடைந்து வேலை இல்லாத சமூகத்தை நினைத்து பாருங்கள் அது எவ்வளவு ஆபத்து விளைவிக்கக்கூடியது, எவ்வகையான குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இதை பற்றி துளியும் சிந்திக்காமல் பிரெச்சனையை மறைத்து என்ன பயன்? ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்டப் இந்தியா, மேக் இன் இந்தியா என பழைய திட்டங்களுக்கு புது புது பேரை வைப்பதை விட்டு  புதிய சிந்தனைகளை பாய்ச்ச வேண்டும் ஆனால் நடப்பது என்ன ?
வேலையின்மை, பொருளாதார மந்த நிலை இப்படி பல பிரச்னைகள் இருக்கிறது ஆனால் பிரதமருக்கு இது குறித்து கூற கருத்து ஒன்றும் இல்லை. சுப்ரமணிய சாமிக்கு பொருளாதார அமைச்சர் ஆக ஆசை. ஆடிட்டருக்கு அதிகாரம் வேண்டும் ஆனால் பொறுப்பு வேண்டாம் இவர்கள் இரண்டு பேரும் சேர்த்து கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அருண் ஜைட்லீயை தாக்கி கொண்டிருக்கிறார்கள். அவரோ பணமதிப்பிழப்பின் போது தன்னை ஆலோசிக்காமல் தன் கருத்திற்கு மதிப்பளிக்காமல் அவராகவே முடிவெடுத்துவிட்டார் என்று மோடி மீது கோபம். இப்படி ஆயிரம் பிரச்சினையை வைத்து கொண்டு பாஜக கவலை படாமல் இருப்பதற்கு காரணம் வேலைவாய்ப்போ, பொருளாதாரமோ அவர்களை அடுத்த தேர்தலில் கரையேற்ற போவது இல்லை ராமர் கோவிலும், ஹிந்துத்துவ தூண்டுதலும் தான்.
மோடி என்ற மகுடியை வைத்து ஹிந்துத்துவ இசையை வாசித்து ஆதி பொடிகளை வசியம் செய்து வைத்திருக்கிறார்கள், வேறு இசையை மாற்ற முயன்றால் அந்த பாம்பு வசிப்பவனை போட்டு தள்ளிவிடும்.  சமீபத்தில் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது, இதை வரவேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் ட்வீட் செய்கிறார்
அதை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் அவரை கடுமையாக எதிர்க்க தொடங்கினர் அதன் பின் அவர் அந்த பதிவை நீக்கி விடுகிறார், இந்த அளவு வெறி ஏற்றி விட்டு செய்வது அறியாது துடிக்கிறார்கள். உண்மையில் ஹர்ஷ் வரதன் தீபாவளியால் ஏற்படும் மாசு பற்றி தீர்ப்பு வருவதற்கு முன்பே பிரச்சாரம் செய்கிறார், பள்ளி குழந்தைகளை சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார்
அனால் தற்போது தங்கள் தொண்டர் படையில் இருந்தே வந்த வெறுப்பின் காரணமாக சத்தமில்லாமல் தன் முயற்சியை கைவிட்டு போட்ட டிவீட்களை நீக்கி விட்டார்.
ஆகையால் தான் என்னவோ தொடர்ந்து பிள்ளைகள் மடிந்த போதிலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத யோகி ஆதித்யநாத், இது வருடத்திற்கு வருடம் நடப்பது தான் என்று சொன்னதும் இல்லாமல் கேரளா முதல்வரை தன் மாநிலத்திற்கு வந்து அரசு மருத்துவமனை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
அவருக்கு நன்கு தெரியும் மோடி பலூன் வெடித்தால் அடுத்த பலூன் தான் தான் என்று, அதனால் தான் ராமருக்கு 100அடி சிலை எழுப்ப கிளம்பிவிட்டார்.
2014ம் ஆண்டு வளர்ச்சி, என்ற முழக்கத்தை மட்டுமே வைத்து தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற்ற பிஜேபிக்கு, அவர்களின் வளர்ச்சி முழக்கம் வெற்று கோஷங்களாகி விட்டது என்பதும், 2019ல் இவர்களின் பல்லிளித்த வாக்குறுதிகள் வெற்றியை பெற்றுத் தராது என்பதும் நன்றாக புரிந்து விட்டது.  இவர்கள் மீண்டும் மதவாதத்தை கையில் எடுத்துதான் 2019 தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள் என்பதே கண்கூடாக தெரிவது.

https://www.savukkuonline.com/12644/
Facek

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

“I dont want to live in a world where everything that I say, everything I do, everyone I talk to, every expression of creativity or love or friendship is recorded” – Edward Snowden
ஆம் நாம் செய்யும் செயலும், இருக்கும் இடமும் நாம் அறியாமலேயே தொடர்ந்து கண்காணிக்க படுகிறது, அதை அறியாமல் நாமும் அதற்கு துணை நிற்கிறோம். உண்மை என்னவென்றால் நம்மை பற்றி நாம் தெரிந்து கொண்டிருப்பதை விட  அமெரிக்காவில் மவுண்ட் வியூவில் உள்ள ஒரு கணினிக்கு நன்றாக தெரியும். ஒரு கற்பனையான உரையாடல் ஒன்று  இன்று நிஜமாகி கொண்டிருக்கிறது
வாடிக்கையாளர் சேவை: Pizza Hut இற்கு அழைத்தமைக்கு நன்றி, உங்கள் ஆதார் என்னை …
வாடிக்கையாளர்: எனக்கு ஒரு…
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், தங்களின் ஆதார் என்னை பதிவு செய்யவும்
வாடிக்கையாளர்: Ok, 1234-1234-1234
வாடிக்கையாளர் சேவை: மிக்க நன்றி, தங்கள் பெயர் ஆனந்த், உங்கள் மொபைல் நம்பர் 9998887776, உங்கள் வீடு 16, கணேஷ் நகர் 3ஆம் தெரு ஆனால் அதை 10 நாட்களுக்கு முன்  காலி செய்து இப்பொது 45, மேத்தா நகர், பேரூர்ரில் இருக்குறீர்கள்   
வாடிக்கையாளர்: !! சரிதான், எனக்கு ஒரு Non-veg Supreme Pizza, டபுள் சீஸ் வேண்டும்
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் டபுள் சீஸ் உகந்தது அல்ல
வாடிக்கையாளர்: ?? சரி சீஸ் இல்லாமல் குடுங்க, அப்படியே கார்லிக் பிரட் , சிக்கன் விங்ஸ் குடுங்க, மொத்தம் எவ்வளவு
வாடிக்கையாளர் சேவை: மொத்தம் 2500 ருபாய்
வாடிக்கையாளர்: சரி என்னோட கிரெடிட் கார்டில் பணம் செலுத்துகிறேன் நோட் பண்ணிக்கோங்க
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், உங்கள் கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்தாதனால் பிளாக் செய்ய பட்டுள்ளது நீங்கள் பணமாகவே செலுத்திவிடுங்கள்
வாடிக்கையாளர்: ஹ்ம்ம் , எத்தனை மணிக்கு டெலிவர் பண்ணுவீங்க?
வாடிக்கையாளர் சேவை: உங்கள் தோழி இன்னும் சற்று நேரத்தில் உங்கள் இல்லத்திற்கு வந்துவிடுவார், கிரிக்கெட் மேட்ச் 5 மணிக்கு ஆரம்பம் அப்பொழுது செய்யலாமா ?
வாடிக்கையாளர் என்னய்யா சொல்ற?
வாடிக்கையாளர் சேவை: உங்கள் மனைவியும், பிள்ளைகளும் நேற்று இரவு ஏழுமலை ட்ராவெல்ஸில் 10 மணிக்கு கோவை சென்று விட்டனர், அதில் இருந்து சுமார் 8 முறை உங்கள் தோழியிடம் உறையாடினீர்கள், 20 முறை குறுஞ்செய்தி அனுப்பி உள்ளீர்கள் ..
வாடிக்கையாளர்: யோ யோவ் 5 மணிக்கே டெலிவெர் பண்ணுயா
இது மிகை படுத்த பட்ட கற்பனையான உரையாடல் அல்ல, சாத்தியமானதே. கூகிள், Facebook, ஸ்மார்ட் போன் உங்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருக்கிறது. ஏன் கூகிள் இலவசமாக உங்களுக்கு சேவை அளிக்கிறது? ஏன் என்றால் நீங்கள் தான் அதன் Product, உங்களுக்கு என்ன பிடிக்கும் , நீங்க எங்க இருக்கீங்க இதை அறிந்து உங்களுக்கு தகுந்த பொருளை விளம்பரப்படுத்துவதே அதன் வியாபாரம்.
எந்த ஒரு நுகர்வோர் தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் தேச பாதுகாப்பிற்கு பயன் படுத்த படும் அது போலவே உங்கள் அனைத்து செயல்களும் உளவு அமைப்புகள் கண்காணித்து கொண்டே இருக்கிறது, அதற்க்கான back door நீங்கள் உபயோகிக்கும் எல்லா மென் பொருளிலும் உண்டு. தனி நபர் ரகசியம் பற்றி கூகிள் தலைவர் எரிக் ஸ்கிமிட் கூறுவது நீங்கள் செய்யும் செயல் யாருக்கும் தெரிய கூடாது என்று நீங்கள் விரும்பினால் ஒருவேளை நீங்கள் அதைசெய்திருக்கவே கூடாது. தனி நபர் சுதந்திரத்தை மீறுவதில் உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா, அதற்க்காக அவர்கள் 2013ஆம்  ஆண்டு ஒதுக்கிய தொகை 52 பில்லியன் டாலர். அமெரிக்காவின் முன்னணி இன்டெலிஜென்ஸ் அமைப்பான NSA , PRISM  என்ற ஒரு ரகசிய ஆபரேஷன் மூலம் எல்லா தகவல் தொழில் நுட்ப அமைப்பிலும் ஊடுருவி உள்ளது.
நீங்கள் கற்பனை செய்து பார்க்க இயலாத வண்ணம் உங்கள் மின்னஞ்சல்கள் , குறுஞ்செய்திகள் , டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்க படுகிறது. நீங்கள் உதிர்க்கும் ஒரு ஒரு வார்த்தையும் “Hot words” எதிராக சரிபார்க்க படுகிறது, உதாரணத்திற்கு நீங்கள் “ஜிகாத்”, “புனித போர்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் உடனடியாக உங்கள் இருப்பிடம் முதல் நீங்கள் செய்யும் அத்தனையும் இன்டெலிஜென்ஸ் கண்கணிப்பில் வந்து விடும். இதை செய்ய 1000 கணக்கான வல்லுநர்கள் தேவை இல்லை, ஒரு 10*10 அறையில் உள்ள செர்வரில் ஓடிக்கொண்டிருக்கும் அல்கோரிதம் செய்துவிடும். முன்னணி ஆயுத சப்ளயர் லாக்ஹீட் மார்ட்டின் உங்கள் ஒரு புகைப்படத்தை வைத்து உங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர் இணைப்பு
உங்கள் நண்பர் உங்கள் புகைபடத்தை டேக் செய்வது முதல் ஆராய்ந்து உங்களை அடையாளப்படுத்தி விடும்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை கற்பனை செய்து பார்ப்போம். நீங்கள் அலுவல் காரணமாக மும்பை செல்குறீர்கள், பணியை முடித்து விட்டு மும்பை பங்கு சந்தை அருகில் உள்ள காளை மாட்டு சிற்பத்தின் முன் நின்று செலஃபீ எடுத்துவிட்டு இரவு சென்னை திரும்புகிறீர்கள். மறுநாள் தொலைக்காட்சியில் பங்கு சந்தையில் குண்டு வெடிப்பு என்ற ஒரு செய்தி வருகிறது, நாம் தப்பித்தோம் என்று எண்ணி சந்தோசம் அடைந்து இருப்பீர்கள்.
இப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக பங்கு சந்தையை உளவு பார்த்தவனை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிகிறது, அவனின் புகைப்படத்தை அணைத்து CCTV பதிவுகளில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவன் விமானத்தில் சென்னையில் இருந்து நீங்கள் வந்த அதே நாள் அதே விமானத்தில் வந்ததது தெரிய வருகிறது, அவனுடன் வந்த பயணிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் நீங்கள் பனி நிமித்தமாக துருக்கி சென்று வந்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மத்திய அரசை எதிர்த்து போஸ்ட் போட்டது, NEET எதிராக MEME லைக் போட்டது, வேதியல் வகுப்பு முடிந்து வந்த உங்கள் 12 வயது மகன் வெடி குண்டு செய்வது எப்படி என்று கூகிள் செர்ச் செய்தது உங்களை ஒரு தீவிரவாதியாக அடையாளம் காட்ட போதுமானது. இதை ஆதாரமாக வைத்து ஜாமினில் வெளி வர முடியாத வழக்கை தொடுத்து உங்களை வருட கணக்கில் சிறையில் அடைக்க முடியும். 10இல் 9 பொருத்தம் பார்க்கும் விஷயம் அல்ல இது, 5 இருந்தாலே போதுமானது அதுவும் உங்கள் பெயர் அப்துல், ஹமீத் இருந்தால் 2 பொருத்தம் மட்டுமே போதும்.
நான் மேற்சொன்ன நிகழ்வு ஒரு சம்பவம் நடந்த பின் அதை செய்தது யாராக இருக்கும் என்று கண்டுபிடிப்பது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது Weaponized data mining அதாவது ஒரு சம்பவம் நடப்பதற்கு முன் அதை யார் செய்யக்கூடும் என்று அனுமானித்து அதை தடுப்பது. இது தவறான அரசாங்கத்திடம் இருந்தால் எவ்வளவு பெரிய நாசம் விளைவிக்க கூடும், நீங்கள் எதார்ச்சியாக செய்யும் செயலை உங்களுக்கு எதிராக திருப்பப்படும். உங்கள் படைப்பாற்றலை முற்றிலுமாக அளித்து விடும், எதை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை குறைத்து விடும். இந்த தொடர் கண்காணிப்பு எல்லா மனிதனையும் கிரிமினல் வட்டத்தில் கொண்டு வந்து விடும், நீங்கள் செய்யும் 1 லட்சம் விசயங்கைளை ஆராயந்தால் அதில் 10 விஷயமாவது நீங்கள் தேசவிரோத செயலை செய்யும் ஒரு நபராக சித்தரிப்பதற்கான சாத்திய கூறு இருக்கும்.
ஒரு குற்றவாளியை அடையாளம் காண அவன் உருவப்படத்தை கிரிமினல் டேட்டாபேஸ்சில் தேடுவது வழக்கம் அதில் இடம்பெறாத முதல் குற்றவாளிகள் தான் இப்பொழுது அதிகம். அவர்களை Lone Wolf என்று அழைக்கப்படுவர், எந்த அமைப்பின் ஆதரவு இன்றி தானாகவே ஒரு சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு கொண்டு தனியாக செயல் படும் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். அனால் அதற்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது, உங்கள் செயல்பாடுகளை வைத்து நீங்கள் எந்த உணர்வில் இருக்கிறீர்கள் என்று கண்டறியப்படும். Facebookயில் “Feeling” என்ற ஒரு ஸ்டேட்டஸ் உள்ளது அது உங்களிடம் இருந்து உங்கள் தற்போதைய எமோஷன் கண்டுபிடிப்பது. 2012 ஆம் ஆண்டு Facebook  ஒரு எமோஷனல் ஆராய்ச்சியை அதன் 7 லட்சம் வாடிக்கையாளர்களை அவர்களுக்கு தெரியாமலேயே செய்தது. இணைப்பு
அதில் உங்கள் முகப்பில் வரும் செய்தில் ஊடே சில டார்கெட்டேட் வார்த்தைகளை நீக்குவது அல்லது சேர்ப்பது, அதன் மூலம் நீங்கள் இடும் லைக் (அதில் உள்ள பல்வேறு பிரிவு Love , HaHa , Sad, Wow ) ஆராய்வது. இதற்கான நிதியை அமெரிக்கா ராணுவ உளவு அமைப்பு Facebook அளிக்கிறது. இப்படி ஒருவன் என்ன மனநிலையில் இருக்கிறான், எந்த புத்தகம் படிக்கிறான், எதை பற்றி அதிகம் தேடுகிறான் என்று ஒரு உளவியல் ஆராய்ச்சியே நடந்துகொண்டுஇருக்கிறது.
இது அமெரிக்காவில் நடக்கிறது நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று என்னைக் கூடும். தொழில்நுட்ப கட்டமைப்பு அடிப்படையில் பார்த்தால் அது சரியே, நம்மால் ஒரு IRCTC வலைத்தளத்தை லோட் பாலன்ஸ் செய்ய இயலவில்லை. ஆனால் நாம் உபயோகபடுத்தும் மென்பொருள் அமெரிக்கன் தயாரிப்புகள், முன் எப்போதும் இல்லாத அளவு நம் இரு நாட்டிற்கான உறவு அதிகரித்திருக்கிறது குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தகவல் பரிமாற்றத்தில். ஆகையால் டெக்னாலஜி ட்ரான்ஸபெர், கட்டமைப்பு என்று எல்லாம் இந்தியாவிற்கும் வந்து சேரும் அப்பொழுது உலகத்தில் எந்த நாட்டிலும் செய்ய இயலாத ஒரு விஷயத்தை நாம் செய்து முடித்திருப்போம் அது பிறக்கும் குழந்தை முதல் கிழவன் வரை அனைவரின் பயோமெட்ரிக் டேட்டாபேஸ். நம் பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ்  முதல்  இறப்பு வரை அனைத்தும் டிஜிட்டலாக index செய்து தேடுவதற்கு தயார் நிலையில் இருக்கும். பிக் பாஸ்சில் 30 கேமெராக்கள் கண்காணிப்பதை போல, நம் வாழ்வின் ஒரு ஒரு நொடியும், நாம் அறியாமல் செய்த தவறுகளும், ஆர்வக்கோளாறினால் செய்யும் செயல்களும்  ஆவணப்படுத்தப்பட்டு அறுவடைக்கு காத்துக் கொண்டிருக்கும்.
சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பது போதாது என்றுதான் தற்போது இந்திய அரசு ஆதாரை அனைத்துக்கும் கட்டாயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது.  வங்கிக் கணக்கு முதல் ட்ரைவிங் லைசென்ஸ் வரை, ஆதாரை அறிமுகப்படுத்தியதன் அடிப்படை நோக்கமே, நமது அத்தனை நடவடிக்கைகளையும் கண்காணிப்பில் கொண்டு வருவதுதான்.
இந்த எலெக்ட்ரானிக் சாதனங்கள், நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளதோ இல்லையோ, ப்ரைவசி என்ற நமது தனியுரிமையை மொத்தமாக காவு வாங்கியுள்ளது என்பது மட்டும் உண்மை.
“A child born today will grow up with no concept of privacy at all. They will never know what it means to have a private moment to themselves, an unrecorded, unanalyzed though” – Edward Snowden

https://www.savukkuonline.com/12553/

Thursday, April 5, 2012

Rh நோய்

எனது நண்பனின் மனைவியின் பிரசவத்தின் போது இந்த நோயாய் பற்றி தெரிந்து கொண்டேன். ஒரு தாய் நெகடிவ் இரத்தப் பிரிவாகவும் அவருக்கு பிறக்கும் குழந்தை பாசிடிவ் இரத்தப்   பிரிவாகவும் இருந்தால் இந்த நோய் தாக்குவதற்கான சாத்தியம் அதிகம்.

இந்த நோய் எப்படி வருதுன்னு பார்தீங்கனா , குழந்தை பிறக்கும் போது குழந்தையோட பாசிடிவ் இரத்தம் தாயோட நெகடிவ் இரத்ததோட கலந்திடுது. தாயோட உடம்பு உசாரா என்ன பண்ணுது, சிவப்பு அணுகலை கொள்ளும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி புதுசா கலந்த இரத்ததோட சண்ட போட்டு அத அழிக்க பாக்குது, இது எல்லாமே குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நடக்கறது. அதுனால அண்ணனுக்கோ, அக்காவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, இனிமேல் பிறக்கபோகும் தம்பிக்கோ, தங்கைகோ தான்(இதுனால தான் என்னவோ பிண்ணாடி தம்பி செஞ்ச தப்புக்கு அண்ணன் அடிவாங்கறான்).

சரி மேட்டருக்கு வருவோம், தாய் அடுத்து கருவுறும் போது ஏற்கனவே இருக்கும் எதிர்ப்பு அணுக்கள் மிச்ச மீதி இருந்தா அது தொப்புள் கொடிவழியே அடுத்த குழந்தையின் உடம்பிற்குள் செல்லும். அங்க போய் குழந்தையோட சிவப்பு அணுகலை தாக்க ஆரம்பிக்கும். இதனால் பிறக்கும் குழந்தை இரத்த சோகை நோயுடன் பிறக்கலாம், இன்னும் தீவிரமாக இருந்தால் குழந்தை இறந்தே பிறப்பதற்கான சாத்தியமும் உண்டு.

இதை தடுக்க, முதல் குழந்தை பிறந்தவுடன் Anti-D என்ற தடுப்பு ஊசி போட வேண்டும். தாய், சேய் இருவரும் நெகடிவ் பிரிவாக இருந்தால் எந்த தொல்லையும் இல்லை.


Do you like it? If yes don't forget to vote for it.

Thursday, March 15, 2012

என்ன நடந்தால் நமக்கு கோபம் வரும்? Srilanka's Killing Fields

லட்சம் கோடி கொள்ளை அடித்த போது கோபம் வரவில்லை ஏன்னா அம்பானி பணக்காரன் ஆவதில் நமக்கு அக்கரை இல்லை, அடுத்த வீட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் பொறுக்காது.


கச்சத்தீவில் இந்திய மீனவன் செத்து மடிந்தாலும் கவலை இல்லை, ஞாயிற்றுக்கிழமை வஞ்சரம் கிடைத்தால் சரி.

ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்தாலும் சரி, நம் மக்கள் இங்கு நலமாக இருந்தால் போதும்.


முத்துகுமரன் , செங்கொடி இருந்தால் என்ன செத்தால் நமக்கு என்ன?


அன்று கடற்கரை ஓரம், மனைவி ஒருபுறம் துணைவி மறுபுறம் புடைசூழ உண்ணா விரதம் இருந்தார், போர் நிற்கும் என்றார், நம்பினோம்.

மத்திய அரசை நிர்பந்திக்க அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் போர் நின்றுவிடும் என்றார்கள் நம்பினோம்.

போர் நிற்காவிடில் கடல் கடந்து சென்று புலிகளுடன் இணைந்து போர் புரிவேன் என்றார், நம்பினோம்.

போரும் நிற்கவில்லை, ராஜினாமாவும் செய்யவில்லை, கடல் கடந்தும் செல்ல வில்லை.. கோபமும் வரவில்லை.

இலங்கைக்கு வேவு பார்க்க ராடார் கருவி தந்தது மட்டும் அல்லாமல், நம் மக்கள் செத்து மடியும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு வாழ்ந்தோம் என்பது கேவலம் அன்றி வேறொன்றும் இல்லை.










பெண்களை மான பங்க படுத்தி, குழந்தைகளை கொன்று, உன்ன உணவும், காயங்களுக்கு மருந்தும் தர மறுத்த நாட்டினை தன் நாடு என்று ஏற்றுகொள்ள எப்படி முடியும்?


உலகம் உற்று நோக்கும் போரின் நடுவே இந்த நிகழ்வுகள் நடக்கும் போது, நாளை தம் மக்கள் ஆயினும் தமிழ் மக்கள் தானே என்று வேரறுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இத்தனை நடந்தும்,  இந்திய வெளிஉறவு அமைச்சர் "இந்தியா எடுக்கும் எந்த முடிவும், இலங்கையுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை பாதித்து விடும்' என்று சொன்னால்

இதை கண்டும் கோபம் வர வில்லை என்றால் என்று தான் வரும்?




Do you like it? If yes don't forget to vote for it.

Tuesday, March 13, 2012

Microsoft's answer to SIRI

Microsoft has demonstrated TTS(Text to speach) system in TechFest 2012. In the demo Rick Rashid, Microsoft’s chief research officer, says a long sentence in English, and then has it translated into Spanish, Italian, and Mandarin in his own voice. Overall it is an excellent demo. Though it is an early stage and the system requires one hour of training to understand the voice patterns of the speaker, the prospects are huge 

In future you can install an app in your windows mobile and talk in English to a Chinese guy and the app can translate it for you in real time. In the demo even they have shown a system to model your face and it even lip sync your speech in Chinese. 

It will be very much helpful for travelers and in future language training centers, translators might be obsolete, this app is like a universal remote!!!

It will be much helpful for people in India and help them to migrate to other cities without any fear.


Do you like it? If yes don't forget to vote for it.

Friday, February 24, 2012

Retirement Planning

The buzz word in the IT industry is early retirement. Most of the friends I know either want to move from IT to some other field or retire early. Do they have any plan? Is it possible to retire early? There is no way to retire early without planning early.  With proper planning you can either achieve the goal or quit your early retirement ideas and plan for a proper retirement. Remember retirement can be saddest or happiest day of your life depending upon the on of cash in hand.

I will walk through a common scenario where one wants to retire at an usual age with proper cushion in place to maintain his life style post retirement. 

Determine Retirement Age

The most important factor in retirement planning is to determine when one wants to quit. The basic rules are
  • After you pay all your debts. It make sense not to think about retirement when you are paying EMI right?
  • After all your long term goals are met (Children's Education/Marriage). You should not think about using your retirement corpus to finance your kids marriage/education. Even giving interest free loan out of your corpus will have a huge impact at later stage.
Determining Post retirement years

This one is tricky. You need to determine your post retirement years. Because post retirement, your corpus will not be linear it is actually a bell curve : meaning: your corpus post retirement will increase gradually initially and starts decreasing till it reaches zero. So if you outlive your expected date then you are left with no money.

This make us understand that like every financial goals you should always revisit and review your retirement plan once in a year throughout your life. We can say this retirement planning has two parts

  • Corpus accumulation (While earning) and
  • Corpus management (After retiring)
Corpus Accumulation
You need to calculate your monthly expense post retirement. You can take your current annual expense and remove all your EMIs, Children related expense and come up with a number which is comfortable for you to live, but don't plan to be too luxurious post retirement. 

Now arrive at the expense, post retirement, indexing the inflation using this calculator


Illustration:
Current Age : 30
Retirment Age: 60
Current Monthly Expense: 30,000
Inflation: 8%


This gives us R.s.3,01,879 per month post retirement which translates into R.s. 36,22,548 per year.

Now determine how long you will live, your post retirement Inflation and post retirement returns.


Post Retirement Years: 25
Expected Returns : 9% (Be conservative post retirement)
Expected Inflation: 8%

Step 1:

Use this calculator and enter the values.


This shows that Rs.80,818,339 is needed as a corpus while retiring. Does it sound impossible? Let us see

Step 2:

Use this calculator  and enter the values

  1. Current savings balance is 80818339 that we get from the above calculator
  2. Proposed monthly withdrawal amount is  301879 which we calculated in illustration
  3. Annual withdrawal increase is the inflation


this calculator will also gives you the yearly split up of your beginning balance, withdrawals and ending balance.

How much do we need to save?

After arriving at a value of Rs.80,818,339 as a corpus we can use this calculator to determine how much money do we need to invest now to achieve that corpus




This shows that we need to save Rs.1,15,358 annualy or 10000 per month (easy man) and increase it by 10% every year to achieve the corpus. which is very much possible


Note: Like every goals there are variety of assumptions we took while doing the calculation like interest rate and inflation. So it is essential to review it once in a year and adjust your investments. Health cost is a different issue post retirement so consider it while calculating future expense.

Do you like it? If yes don't forget to vote for it.

Thursday, February 16, 2012

பள்ளியின் அவல நிலை

பீகார் மாநிலத்தில் ஒரு 4 வயது குழந்தை கணக்கு வராத காரணத்தினால் ஆசிரியரால் அடித்து பார்வை இழந்து விட்டான். என்னதான் நடக்குது நம்ம நாட்டுல? 4 வயசு குழந்தை நல்லா பேசினாலே சந்தோஷ படனும், கணக்கு வரலைன்னு அடிக்கறது ரொம்ப அதிகப்படியா  இருக்கு.  தோனி, 3 idiotsTaare Zammen Par இப்படி 1000 படம் வந்தாலும் அதை படமாக மட்டுமே பார்த்து, இதுல த்ரிஷா நடிச்சிருந்த நல்லா இருக்கும் மச்சி, சந்தானமும் தோணில இருந்திருந்த செம காமெடியா இருந்திருக்கும் மச்சின்னு அலைய வேண்டியது தான். 


நான் படிச்சா பள்ளில 2  கால் பந்தாட்ட மைதானம், 2 ஹாக்கி மைதானம், 1 கூடை பந்து மைதானம் இருந்தது, அவ்ளோ பெரிய இடம் இன்றைக்கு இருந்தால் அதுல 8 பள்ளிக்கூடம் கட்டி  நன்கொடைய கறந்திருவாங்க . ஒரு குழந்தைக்கு படிப்புல தான் ஆர்வம் இருக்கும்னு சொல்ல முடியாது, விளையாட்டில் இருக்கலாம் , ஓவியத்துல இருக்கலாம் , கலைல  இருக்கலாம் அத கண்டுபிடிக்கிற முயற்சியை தான் பள்ளியும், ஆசிரியர்களும் செய்யணும்.

இன்றைக்கு இருக்கிற ஆசிரியர்களோட நிலைமை என்ன? நீ பெண்ணா?  நல்லா படிக்கலையா? டீச்சர் ட்ரைனிங் போ. உனக்கு வேலை கிடைக்கலையா? ஆசிரியரா போ . ஆசிரியரே மனப்பாடம் பண்ணி வகுப்பு எடுக்கும் போது, குழந்தை எப்படி புரிஞ்சு படிக்கும்?
கணிதத்தில் 9 ஆம் வாய்பாடு வரை தெரிந்தால் போதும், அதுவும்  5 * 2 = 10 என்று மனடபட்ம் செய்வதை விட  ஐந்தை இரண்டு முறை கூட்டினால் பத்து என்று தெரிந்தாலே போதுமானது. 

வரலாற்றில் பானிபட் போர் நடந்த வருடத்தை விட அந்த போர் எதனால் நடந்தது, அதன் விளைவுகள் என்ன என்று தெரிந்தால் போதுமானது. 

அதை விட்டுவிட்டு speed maths, memory techniques கற்று தர தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறோம்.

பள்ளித் தேர்வுகளிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதிகமாக, வேகமாக , உள்ளதை உள்ள படி எழுதினால் தான் அதிக மதிப்பெண் என்ற நடைமுறையை மாற்ற வேண்டும்.  பக்கம் பக்கமாக எழுதுவதை விட, முக்கியமான விஷயங்களை மட்டும் புள்ளி விவரமாக எழுதினால் போதுமானது.

கணிதத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பயன்படும் அணைத்து சூத்திரங்களையும் வினா தாளிலேயே தந்துவிட வேண்டும். எந்த சூத்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் தெரிந்தாலே போதுமானது.

அணைத்து பாடத்திற்கும் செய்முறை பாடம் இருத்தல் அவசியம், அதை முதல் வகுப்பில்  இருந்தே செயல் படுத்த வேண்டும். எழுத்து தேர்விலோ அல்லது செய்முறை தேர்விலோ எதில் ஒன்றில் தேர்ச்சி பெற்றாலோ அந்த மாணவன் தேர்ச்சி பெற்றதாக கருத வேண்டும். 7 ஆம் வகுப்பு வரை தேர்வே தேவை இல்லை.

ஒரு மாணவனுக்கு எல்லா பாடத்திலும் ஆர்வம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அப்படி ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற வில்லை என்றால் அவன் முட்டால் அல்ல. பொது தேர்வில் ஒரு மாணவன் கணிதத்தில், இயற்பியலில் தேர்ச்சி பெற்று உயிரியலில் தேர்ச்சி பெறாமல் போனால் அவனை மறுபடி அதே வகுப்பில் படிக்க வைப்பது கொடுமை. தேவை பட்டால் அவன் உயிரியல் மட்டும் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறட்டும். அப்படி அவனுக்கு அதில் ஈடுபாடு இல்லை என்றால் அவன் பொறியியல் படிக்கட்டும். அனைத்திலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தை மாற்ற வேண்டும். 

பள்ளி என்பது ஒரு மாணவனுக்கு வெவ்வேறு படிப்பினை அறிமுக படுத்தி அவனின் ஆர்வத்தை தூண்டுவதும், கண்டரிந்தலும், சமுகத்தில் பழகுவது, ஒழுக்கம், நட்பு, விளையாட்டு, கலை போன்றவற்றை கற்று கொடுபதற்கு தான். 

பெற்றோர்களே உங்கள் மகன் எதாவது ஒன்றில் ஆர்வமாக இருப்பான் அதை கண்டுபிடித்து அதில் அவனை சாதிக்க ஊக்க படுத்துங்கள். மருத்துவமும், பொறியியலும் மட்டுமே படிப்பு அல்ல. படிக்கச் வில்லை என்றாலும் தவறு இல்லை நேர்மையாக இருக்க கற்றுகொடுங்கள், செய்வதை ரசித்து செய்ய சொல்லி தாருங்கள்.

பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த  கல்லூரில படிச்சாங்க?


Do you like it? If yes don't forget to vote for it.