Sunday, November 19, 2017

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

“I dont want to live in a world where everything that I say, everything I do, everyone I talk to, every expression of creativity or love or friendship is recorded” – Edward Snowden
ஆம் நாம் செய்யும் செயலும், இருக்கும் இடமும் நாம் அறியாமலேயே தொடர்ந்து கண்காணிக்க படுகிறது, அதை அறியாமல் நாமும் அதற்கு துணை நிற்கிறோம். உண்மை என்னவென்றால் நம்மை பற்றி நாம் தெரிந்து கொண்டிருப்பதை விட  அமெரிக்காவில் மவுண்ட் வியூவில் உள்ள ஒரு கணினிக்கு நன்றாக தெரியும். ஒரு கற்பனையான உரையாடல் ஒன்று  இன்று நிஜமாகி கொண்டிருக்கிறது
வாடிக்கையாளர் சேவை: Pizza Hut இற்கு அழைத்தமைக்கு நன்றி, உங்கள் ஆதார் என்னை …
வாடிக்கையாளர்: எனக்கு ஒரு…
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், தங்களின் ஆதார் என்னை பதிவு செய்யவும்
வாடிக்கையாளர்: Ok, 1234-1234-1234
வாடிக்கையாளர் சேவை: மிக்க நன்றி, தங்கள் பெயர் ஆனந்த், உங்கள் மொபைல் நம்பர் 9998887776, உங்கள் வீடு 16, கணேஷ் நகர் 3ஆம் தெரு ஆனால் அதை 10 நாட்களுக்கு முன்  காலி செய்து இப்பொது 45, மேத்தா நகர், பேரூர்ரில் இருக்குறீர்கள்   
வாடிக்கையாளர்: !! சரிதான், எனக்கு ஒரு Non-veg Supreme Pizza, டபுள் சீஸ் வேண்டும்
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் டபுள் சீஸ் உகந்தது அல்ல
வாடிக்கையாளர்: ?? சரி சீஸ் இல்லாமல் குடுங்க, அப்படியே கார்லிக் பிரட் , சிக்கன் விங்ஸ் குடுங்க, மொத்தம் எவ்வளவு
வாடிக்கையாளர் சேவை: மொத்தம் 2500 ருபாய்
வாடிக்கையாளர்: சரி என்னோட கிரெடிட் கார்டில் பணம் செலுத்துகிறேன் நோட் பண்ணிக்கோங்க
வாடிக்கையாளர் சேவை: மன்னிக்கவும், உங்கள் கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்தாதனால் பிளாக் செய்ய பட்டுள்ளது நீங்கள் பணமாகவே செலுத்திவிடுங்கள்
வாடிக்கையாளர்: ஹ்ம்ம் , எத்தனை மணிக்கு டெலிவர் பண்ணுவீங்க?
வாடிக்கையாளர் சேவை: உங்கள் தோழி இன்னும் சற்று நேரத்தில் உங்கள் இல்லத்திற்கு வந்துவிடுவார், கிரிக்கெட் மேட்ச் 5 மணிக்கு ஆரம்பம் அப்பொழுது செய்யலாமா ?
வாடிக்கையாளர் என்னய்யா சொல்ற?
வாடிக்கையாளர் சேவை: உங்கள் மனைவியும், பிள்ளைகளும் நேற்று இரவு ஏழுமலை ட்ராவெல்ஸில் 10 மணிக்கு கோவை சென்று விட்டனர், அதில் இருந்து சுமார் 8 முறை உங்கள் தோழியிடம் உறையாடினீர்கள், 20 முறை குறுஞ்செய்தி அனுப்பி உள்ளீர்கள் ..
வாடிக்கையாளர்: யோ யோவ் 5 மணிக்கே டெலிவெர் பண்ணுயா
இது மிகை படுத்த பட்ட கற்பனையான உரையாடல் அல்ல, சாத்தியமானதே. கூகிள், Facebook, ஸ்மார்ட் போன் உங்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருக்கிறது. ஏன் கூகிள் இலவசமாக உங்களுக்கு சேவை அளிக்கிறது? ஏன் என்றால் நீங்கள் தான் அதன் Product, உங்களுக்கு என்ன பிடிக்கும் , நீங்க எங்க இருக்கீங்க இதை அறிந்து உங்களுக்கு தகுந்த பொருளை விளம்பரப்படுத்துவதே அதன் வியாபாரம்.
எந்த ஒரு நுகர்வோர் தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் தேச பாதுகாப்பிற்கு பயன் படுத்த படும் அது போலவே உங்கள் அனைத்து செயல்களும் உளவு அமைப்புகள் கண்காணித்து கொண்டே இருக்கிறது, அதற்க்கான back door நீங்கள் உபயோகிக்கும் எல்லா மென் பொருளிலும் உண்டு. தனி நபர் ரகசியம் பற்றி கூகிள் தலைவர் எரிக் ஸ்கிமிட் கூறுவது நீங்கள் செய்யும் செயல் யாருக்கும் தெரிய கூடாது என்று நீங்கள் விரும்பினால் ஒருவேளை நீங்கள் அதைசெய்திருக்கவே கூடாது. தனி நபர் சுதந்திரத்தை மீறுவதில் உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா, அதற்க்காக அவர்கள் 2013ஆம்  ஆண்டு ஒதுக்கிய தொகை 52 பில்லியன் டாலர். அமெரிக்காவின் முன்னணி இன்டெலிஜென்ஸ் அமைப்பான NSA , PRISM  என்ற ஒரு ரகசிய ஆபரேஷன் மூலம் எல்லா தகவல் தொழில் நுட்ப அமைப்பிலும் ஊடுருவி உள்ளது.
நீங்கள் கற்பனை செய்து பார்க்க இயலாத வண்ணம் உங்கள் மின்னஞ்சல்கள் , குறுஞ்செய்திகள் , டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்க படுகிறது. நீங்கள் உதிர்க்கும் ஒரு ஒரு வார்த்தையும் “Hot words” எதிராக சரிபார்க்க படுகிறது, உதாரணத்திற்கு நீங்கள் “ஜிகாத்”, “புனித போர்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் உடனடியாக உங்கள் இருப்பிடம் முதல் நீங்கள் செய்யும் அத்தனையும் இன்டெலிஜென்ஸ் கண்கணிப்பில் வந்து விடும். இதை செய்ய 1000 கணக்கான வல்லுநர்கள் தேவை இல்லை, ஒரு 10*10 அறையில் உள்ள செர்வரில் ஓடிக்கொண்டிருக்கும் அல்கோரிதம் செய்துவிடும். முன்னணி ஆயுத சப்ளயர் லாக்ஹீட் மார்ட்டின் உங்கள் ஒரு புகைப்படத்தை வைத்து உங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர் இணைப்பு
உங்கள் நண்பர் உங்கள் புகைபடத்தை டேக் செய்வது முதல் ஆராய்ந்து உங்களை அடையாளப்படுத்தி விடும்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை கற்பனை செய்து பார்ப்போம். நீங்கள் அலுவல் காரணமாக மும்பை செல்குறீர்கள், பணியை முடித்து விட்டு மும்பை பங்கு சந்தை அருகில் உள்ள காளை மாட்டு சிற்பத்தின் முன் நின்று செலஃபீ எடுத்துவிட்டு இரவு சென்னை திரும்புகிறீர்கள். மறுநாள் தொலைக்காட்சியில் பங்கு சந்தையில் குண்டு வெடிப்பு என்ற ஒரு செய்தி வருகிறது, நாம் தப்பித்தோம் என்று எண்ணி சந்தோசம் அடைந்து இருப்பீர்கள்.
இப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக பங்கு சந்தையை உளவு பார்த்தவனை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிகிறது, அவனின் புகைப்படத்தை அணைத்து CCTV பதிவுகளில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவன் விமானத்தில் சென்னையில் இருந்து நீங்கள் வந்த அதே நாள் அதே விமானத்தில் வந்ததது தெரிய வருகிறது, அவனுடன் வந்த பயணிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் நீங்கள் பனி நிமித்தமாக துருக்கி சென்று வந்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மத்திய அரசை எதிர்த்து போஸ்ட் போட்டது, NEET எதிராக MEME லைக் போட்டது, வேதியல் வகுப்பு முடிந்து வந்த உங்கள் 12 வயது மகன் வெடி குண்டு செய்வது எப்படி என்று கூகிள் செர்ச் செய்தது உங்களை ஒரு தீவிரவாதியாக அடையாளம் காட்ட போதுமானது. இதை ஆதாரமாக வைத்து ஜாமினில் வெளி வர முடியாத வழக்கை தொடுத்து உங்களை வருட கணக்கில் சிறையில் அடைக்க முடியும். 10இல் 9 பொருத்தம் பார்க்கும் விஷயம் அல்ல இது, 5 இருந்தாலே போதுமானது அதுவும் உங்கள் பெயர் அப்துல், ஹமீத் இருந்தால் 2 பொருத்தம் மட்டுமே போதும்.
நான் மேற்சொன்ன நிகழ்வு ஒரு சம்பவம் நடந்த பின் அதை செய்தது யாராக இருக்கும் என்று கண்டுபிடிப்பது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது Weaponized data mining அதாவது ஒரு சம்பவம் நடப்பதற்கு முன் அதை யார் செய்யக்கூடும் என்று அனுமானித்து அதை தடுப்பது. இது தவறான அரசாங்கத்திடம் இருந்தால் எவ்வளவு பெரிய நாசம் விளைவிக்க கூடும், நீங்கள் எதார்ச்சியாக செய்யும் செயலை உங்களுக்கு எதிராக திருப்பப்படும். உங்கள் படைப்பாற்றலை முற்றிலுமாக அளித்து விடும், எதை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை குறைத்து விடும். இந்த தொடர் கண்காணிப்பு எல்லா மனிதனையும் கிரிமினல் வட்டத்தில் கொண்டு வந்து விடும், நீங்கள் செய்யும் 1 லட்சம் விசயங்கைளை ஆராயந்தால் அதில் 10 விஷயமாவது நீங்கள் தேசவிரோத செயலை செய்யும் ஒரு நபராக சித்தரிப்பதற்கான சாத்திய கூறு இருக்கும்.
ஒரு குற்றவாளியை அடையாளம் காண அவன் உருவப்படத்தை கிரிமினல் டேட்டாபேஸ்சில் தேடுவது வழக்கம் அதில் இடம்பெறாத முதல் குற்றவாளிகள் தான் இப்பொழுது அதிகம். அவர்களை Lone Wolf என்று அழைக்கப்படுவர், எந்த அமைப்பின் ஆதரவு இன்றி தானாகவே ஒரு சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு கொண்டு தனியாக செயல் படும் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். அனால் அதற்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது, உங்கள் செயல்பாடுகளை வைத்து நீங்கள் எந்த உணர்வில் இருக்கிறீர்கள் என்று கண்டறியப்படும். Facebookயில் “Feeling” என்ற ஒரு ஸ்டேட்டஸ் உள்ளது அது உங்களிடம் இருந்து உங்கள் தற்போதைய எமோஷன் கண்டுபிடிப்பது. 2012 ஆம் ஆண்டு Facebook  ஒரு எமோஷனல் ஆராய்ச்சியை அதன் 7 லட்சம் வாடிக்கையாளர்களை அவர்களுக்கு தெரியாமலேயே செய்தது. இணைப்பு
அதில் உங்கள் முகப்பில் வரும் செய்தில் ஊடே சில டார்கெட்டேட் வார்த்தைகளை நீக்குவது அல்லது சேர்ப்பது, அதன் மூலம் நீங்கள் இடும் லைக் (அதில் உள்ள பல்வேறு பிரிவு Love , HaHa , Sad, Wow ) ஆராய்வது. இதற்கான நிதியை அமெரிக்கா ராணுவ உளவு அமைப்பு Facebook அளிக்கிறது. இப்படி ஒருவன் என்ன மனநிலையில் இருக்கிறான், எந்த புத்தகம் படிக்கிறான், எதை பற்றி அதிகம் தேடுகிறான் என்று ஒரு உளவியல் ஆராய்ச்சியே நடந்துகொண்டுஇருக்கிறது.
இது அமெரிக்காவில் நடக்கிறது நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று என்னைக் கூடும். தொழில்நுட்ப கட்டமைப்பு அடிப்படையில் பார்த்தால் அது சரியே, நம்மால் ஒரு IRCTC வலைத்தளத்தை லோட் பாலன்ஸ் செய்ய இயலவில்லை. ஆனால் நாம் உபயோகபடுத்தும் மென்பொருள் அமெரிக்கன் தயாரிப்புகள், முன் எப்போதும் இல்லாத அளவு நம் இரு நாட்டிற்கான உறவு அதிகரித்திருக்கிறது குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தகவல் பரிமாற்றத்தில். ஆகையால் டெக்னாலஜி ட்ரான்ஸபெர், கட்டமைப்பு என்று எல்லாம் இந்தியாவிற்கும் வந்து சேரும் அப்பொழுது உலகத்தில் எந்த நாட்டிலும் செய்ய இயலாத ஒரு விஷயத்தை நாம் செய்து முடித்திருப்போம் அது பிறக்கும் குழந்தை முதல் கிழவன் வரை அனைவரின் பயோமெட்ரிக் டேட்டாபேஸ். நம் பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ்  முதல்  இறப்பு வரை அனைத்தும் டிஜிட்டலாக index செய்து தேடுவதற்கு தயார் நிலையில் இருக்கும். பிக் பாஸ்சில் 30 கேமெராக்கள் கண்காணிப்பதை போல, நம் வாழ்வின் ஒரு ஒரு நொடியும், நாம் அறியாமல் செய்த தவறுகளும், ஆர்வக்கோளாறினால் செய்யும் செயல்களும்  ஆவணப்படுத்தப்பட்டு அறுவடைக்கு காத்துக் கொண்டிருக்கும்.
சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பது போதாது என்றுதான் தற்போது இந்திய அரசு ஆதாரை அனைத்துக்கும் கட்டாயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது.  வங்கிக் கணக்கு முதல் ட்ரைவிங் லைசென்ஸ் வரை, ஆதாரை அறிமுகப்படுத்தியதன் அடிப்படை நோக்கமே, நமது அத்தனை நடவடிக்கைகளையும் கண்காணிப்பில் கொண்டு வருவதுதான்.
இந்த எலெக்ட்ரானிக் சாதனங்கள், நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளதோ இல்லையோ, ப்ரைவசி என்ற நமது தனியுரிமையை மொத்தமாக காவு வாங்கியுள்ளது என்பது மட்டும் உண்மை.
“A child born today will grow up with no concept of privacy at all. They will never know what it means to have a private moment to themselves, an unrecorded, unanalyzed though” – Edward Snowden

https://www.savukkuonline.com/12553/

No comments:

Post a Comment