மும்பை குண்டு வெடிப்பு:
மீண்டும் ஒரு முறை நேற்று மும்பாயில் குண்டு வெடிப்பு. 20 பேர் மரணம் அடைந்ததாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் கூறபடுகிறது. இதை தொடர்ந்து நடக்க போகும் நிகழ்வுகளை உங்களால் யூகிக்க முடியுமா என்ற குழப்பம் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் அளியுங்கள்.
சன் தொலைகாட்சியில் வரும் நெடும் தொடரை காண்பவர நீங்கள்?
ஒரு மாதம் தொடர்ந்து தொடரை பார்க்காமல், மறு வாரம் ஒரே எபிசொட் பார்த்துவிட்டு மொத்த கதையையும் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா ?
இந்த கேள்விகளுக்கு ஆம் என்றால் கண்டிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் என்ன நடக்கும் என்பதையும் உங்களால் யூகிக்க முடியும்.
- ATS, NSG, Commando, Black Guard, Itch Guard எல்லாம் தயார் நிலையில் உள்ளது என்று சிதம்பரம் அய்யா கூறுவார்.
- சச்சின் டெண்டுல்கர் நுறாவது சதம் அடிக்கும் வரை, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் வரை, பூனம் பண்டே தனது சபதத்தை நிறைவேற்றும் வரை ; தனக்கு மாரடைப்பு ஏற்படும் வரை அல்லது நமக்கு பைத்தியம் பிடிக்கும் வரை தெய்வத் திருமகன் அர்னாப் கோஸ்வாமி சொற்பொழிவு தினமும் நடக்கும்.
- குண்டு வெடித்த செய்தி அறிந்த கசாப் அதை சிறையில் எப்படி கொண்டாடினர் என்ற புலனாய்வு கட்டுரை வெளி வரும்.
- குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று கண்டறிய படும். பாகிஸ்தான் அதை மறுக்கும்.
- இந்தியா மீண்டும் முக்கிய குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து அனுப்பும். அதில் நம்ம வல்லரசு படத்தில் நடித்த வாசிம் கான் பெயரையும் தப்பாக இணைத்து குட்டு வாங்கும்.
கோவை கொலை:
குடி போதையில் ஏற்பட்ட தகராறால் கோபம் அடைந்த ஒரு நாதேறி, அவனுடைய நண்பர்கள் உடன் சென்று பட்ட பகலில், பொது மக்கள் மத்தியில் அந்த நபரை அடித்தே கொன்று இருக்கிறான்.
இதை எதோ குரங்கு வித்தை பார்ப்பது போல பார்த்து கடந்து சென்ற நாம் மும்பைல நடந்த குண்டு வெடிப்புக்கு அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் குறை கூற எந்த விதத்திலும் அருகதை இல்லை.
அங்க இருந்த ஒருத்தனுக்கு கூடவா இதை தடுக்க தைரியம் இல்லை? எப்படி வரும் தைரியம்? இப்போ ஒருத்தன் தடுக்க முயற்சி பண்றானு வைங்க, எப்படியும் அவனுக்கும் அடி விழும், இல்லை அவனும் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது வரும். வீட்ல இருக்கவங்க சும்மாவா இருபாங்க?
உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? அதனை பேரும் பாத்திட்டு பேசாம தான இருந்தாங்க, நீ தான் உலகத்த காப்பாத்த போரவணா? போன்ற கேள்விகளுக்கு ஆளாக வேண்டும் .
மும்பைல அரசாங்கம் மட்டும் என்ன வீட்டுக்கு வீடு கண்காணிக்க முடியுமா, இல்லை பொது இடத்திற்கு வரும் எலோரையும் சோதனை இட முடியுமா? எப்படியும் எவனுகாவது இதை பத்தி முனாடியே தெரிந்திருக்கும் எனக்கு எதுக்கு வம்புனு தான் இருந்திருப்பான்.
அதனால அரசங்காத குறை கூறுவதையும், திருத்துவதையும் விட்டுட்டு நாம நம்மள திருத்துவோம். நம்ம தான் இப்படி வளந்துடோம், நம்ம குழந்தைகளாவது தைரியத்தோடு வளர தேவையான சூழலை உருவாக்குவோம்.
தன்னை சுற்றி நடக்கும் தப்பை கண்டு கோபப் படும் பொழுது பொழைக்க தெரியாதவனு சொல்வதை விட்டுவிட்டு அவர்களுக்கு துணை நிற்போம்.
அந்த கோபத்தை வன்முறை இன்றி வெளிபடுத்த உதவுவோம். அதன் விளைவாக நம் பிள்ளைகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஆறுதல் அளிப்போம், எந்த சூழலிலும் அவர்களுடன் நாம் இருப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவோம். இதுவே மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாசு நாட்ட திருத்த நம்ம கேப்டன் இருகாரு, நாம நம்ம வீட்ட திருத்துவோம்.
"Be the change you want to see" - Mahatma Gandhi
Do you like it? If yes don't forget to vote for it.
No comments:
Post a Comment