Monday, July 11, 2011

என்று முடியும் இந்த கிளியின் லீலை?

குறிப்பு: இந்த பதிவை முழுமையாக ரசிக்க நீங்கள் என் நண்பன் கிளியை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சனிகிழமை அவசரமாக கோவைக்கு கிளம்ப நேரிட்டது. டிக்கெட் முன்பதிவு செய்யாததால் அரசு பேருந்தில் கிளம்பி சென்றேன். மறுதினம் முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் இடம் கிடைப்பது இன்னும் சிரமமாக இருக்கும். அதனால் செய்வது அறியாமல் எனது கல்லுரி நண்பன் கிளியின் உதவியை நாடினேன். அவனும் சில பேருந்துகளில் விசாரித்து விட்டு இடம் இல்லை என்று கூறிவிட்டான்.

மறுநாள் 11.45 மணிக்கு கோவை தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன் என் அதிஷ்டம் ஒரு குளிர் சாதன வண்டி தயார் நிலையில் இருந்தது. 12 மணிக்கு வண்டி கிளம்பி விட்டது, சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பிறகு எனக்கு சனி உச்சத்திற்கு வந்து விட்டது. எனது நண்பன் கிளி என்னை கைபேசியில் அழைத்து எனது பயணம் குறித்து விசாரித்தான்.

அதற்கு பிறகு வேகமெடுத்த பேருந்து பேய் வேகத்தில் சென்று 2  மணி அளவில் சேலத்தை சென்று அடைந்தது. அங்கே ஆறு பயணிகள் ஏறினர். அதில் ஒரு பயணி இநோருவரிடம் நான் கிருஷ்ணகிரியில் இறங்கி விடுவேன் அங்கிருந்து பெங்களுரு செல்ல பேருந்து கிடைக்குமா என்று கேட்டார், அதற்கு அவர் இந்த வண்டியே பெங்களுற்கு தான் செல்கிறது என்று சொன்னவுடன் எனக்கு வேர்த்து விட்டது. நான் இல்லை இந்த வண்டி சென்னைக்கு செல்கிறது என்றேன். இதை கேட்ட சில பயணிகள் இது சென்னைக்கு செல்கிறது என்றும் சிலர் இல்லை பெங்களுற்கு செல்கிறது என்றும் கூறினார்.

டிக்கெட் ஏற்றிய அந்த நாதேறி யார் என்று தெரிய வில்லை. பிரெச்சனை பெரிதானவுடன் என்ன செய்வது என்று புரியாத நடத்துனர், சென்னைக்கு போகிறவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள் என்றார் அதிஷ்ட வசமாக சென்னைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பெங்களுருக்கு செல்லும் பயணிகளை இறக்கி விட முடிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடிந்த பயணிகள் சண்டை இடவும் இனொரு பேருந்தில் அவர்களை ஏற்றி செல்வது என்று முடிவு செய்யப்பட்ட பின்பு எங்கள் பேருந்தை எடுக்க அனுமதித்தனர். காலதாமதமாக பேருந்து புறப்பட்டு சென்றது.

எப்படியோ அடித்து பிடித்து கோயம்பேடு வந்து சேரும் பொழுது மணி 9.30. நல்ல வேலை கிளியின் லீலையால் பெங்களூர் செல்லாமல் தப்பித்தோம் என்று நினைத்து தாம்பரம் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த பேருந்தில் ஏறுவதற்கு ஒரு 100 பேராவது காத்திருந்தனர். ஒருவழியாக பேருந்தில் ஏறி தாம்பரம் வந்து சேர்கையில் மணி 11.15.

மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு நடந்து வந்து சேர்ந்தால் ஒரு 200 பேர் சாலை மறியலில் செய்து கொண்டு இருந்தனர். என்வென்று விசாரித்தால் இரவு நேர பேருந்து அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அதனால் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலை ஏற்றி விட்டதாகவும் புலம்பி தள்ளினர். சாதரணமாக என் வீட்டிற்கு செல்ல 60 ரூபாய் வாங்கும் ஆட்டோ காரர்கள் அன்று 150 ரூபாய் கேட்டனர்.

டிராபிக் போலீஸ் எவ்வளவு சமாதனம் செய்தும் கேட்கவில்லை. பிறகு அவர் டிபோவிற்கு போன் செய்து ஒரு பேருந்தை வர செய்தார். பயணிகள் அமர்ந்து வண்டி புறப்படும் நில்லையில் அது பிரேக்டௌன் ஆனது, கடுப்பான மக்கள் மீண்டும் சாலை மறியல் செய்தனர்.

பின்பு அங்கு வந்த லாரி அனைத்தையும் நிறுத்தி அதில் மக்களை ஏற்றி அவர் அனுப்பி வைத்தார்.  ஒரு வழியாக வீடு வந்து சேர மணி 12.30. கலையில் நன்றாக ஆரம்பித்த என் பயணம் அந்த ஒரு போன் காலால் திசை மாறியது. என்னுடன் சேர்ந்து அவதி பட்ட மற்ற பயணிகளை நினைத்தாள் தான் பரிதாபமாக உள்ளது.

இந்த கிளின் தொலைக்கு முடிவே இல்லையா ?


Do you like it? If yes don't forget to vote for it.

No comments:

Post a Comment