Monday, October 24, 2011

AGS சினிமாசின் அட்டகாசம்

வர வர நம்ம திரை அரங்குகளோட அட்டகாசத்துக்கு அளவே இல்லாம போய்டுச்சு. அதுவும் இந்த AGS சினிமாஸ் எல்லை மீறி போய்ட்டு இருக்கனுங்க. முன்னை எல்லாம் எங்க ஊர்ல சினிமா பாக்க போனா,  எங்க அம்மா முறுக்கு, எள்ளடை எல்லாம் தயாரா எடுத்துட்டு வருவாங்க. இப்போ தண்ணி கூட எடுத்துட்டு போக முடியாது.

என்னதான் மொக்கை படமா இருந்தாலும் காண்டீன், பார்கிங் வச்சு கல்லா கட்றது தான் இவனுகளோட ஒரே நோக்கம். சமோசா 60 ரூபாய், எங்க ஆபீஸ்ல யாருமே அண்டாத வெண்டிங் மெசின் காபி 50 ரூபாய், சரி தண்ணியாவது வாங்கி குடிக்கலாம்னு பாத்தா  வெளிய 12 ரூபாய்க்கு கிடைக்கற அதே தண்ணி இங்க 18 ரூபாய். எங்க ஊரு தியேட்டர்ல ஒரு ஆண்டால தண்ணி வச்சு, ஒரு டம்ளர கட்டி தொங்க விட்டிருபனுங்க இங்க அதுவும் கிடையாது.

இந்த தீபாவளிக்கு படத்துக்கு போகலாம்னு பாத்தா தலைல இடிய போட்டனுங்க, ஒரு டிக்கெட் 250 ரூபாய். சாப்பாடோட தரானுன்கலாம். சாப்பாடு நான் கேடேனா? "STD code நான் கேடேனா?"

  















130 ரூபாய்க்கு அப்படி என்ன தான் சாப்பாடு தரீங்க?  தலபாகட்டி சிக்கன் பிர்யானியா?

சரி இந்த வாரத்துல எதாவது டிக்கெட் இருக்கானு பாத்தா, தீபாவளிக்கு முண்ணாடி எல்லா படத்துக்கும் டிக்கெட் விலை 120 தான் 

  
















ஏன்டா இப்படி? படுத்தரனுன்களே..  தீபாவளிய வச்சு ஆட்டைய போடறதுன்னு முடிவு பண்ணிடீங்க, நடத்துங்கடா. இந்த சூனா பானாவுக்கு திருட்டு DVD இருக்கு அத வச்சு அவன் சமாளிச்சுபான்.


பி .கு: வேலாயுதத்துக்கு 250 ரொம்ப ஓவர் மச்சி, எதாவது பாத்து பண்ணுங்க. அவன் அவன் விஜய் படத்துக்கு டிக்கெட் கூட அனாசின் மாத்திரை, கட்டிங், LIC இன்சூரன்ஸ், எலி மருந்துன்னு கூவி கூவி வித்துட்டு இருக்கனுங்க, இவனுங்க 250  ரூபாயாம் !!!


Do you like it? If yes don't forget to vote for it.

No comments:

Post a Comment