Tuesday, June 14, 2011

கல்வி கட்டணம்

  தொலைகாட்சி பெட்டி, மிக்சி இலவசமா தரத்துக்கு பதிலா கல்வியும், மருத்துவமும் இலவசமா தந்தா நல்ல தான் இருக்கும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டனத்த அரசு நிர்ணயம் பண்றங்கனு கேள்வி பட்டேன், இது எந்த வகைல உதவும்னு தெரியவில்லை. 

என்ன தான் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்தாலும் எதாவது ஒரு வகையில் இழந்ததை எப்படியும் நன்கொடை , புத்தக கட்டணம்,  தேர்வு கட்டணம், கேளிக்கை கட்டணம் என்று வசூலித்து விடுவார்கள்.  

கல்வி தொகை அதிகமாக இருபதற்கு தனியார் கல்விநிலையங்கள் சொல்லும் கரணங்கள் இவை 
  • அதி நவீன உள்கட்டமைப்பு 
  • கல்வித்தரம்
  • ஆசிரியர் சம்பளம் 
பெரும்பாலான பெற்றோர்கள் இதை ஒத்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்பதால் தான் வருட வருடம் கல்வி கட்டணம் அதிகரித்து கொண்டே போகிறது. அதுவும் இல்லாமல் அவர்கள் பள்ளியில் சேர்க்கும் விதிகள் இருகிறதே. L.K.G படிக்கும் பிள்ளைக்கு நேர்முக தேர்வு, தாயார் படித்திருக்க வேண்டும் அதுவும் ஆங்கில வழியில் ஆனால் வேளைக்கு செல்ல கூடாது (வீட்டில் சொல்லி தர வேண்டுமாம்). நல்ல வேலை வீட்டில் வேலை செய்யும் ஆயவும் பித்தாகருஸ் சூத்திரம் படித்திருக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. 

எனக்கு என்னவோ இதை எல்லாம் விட்டு விட்டு அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்ன வேடிக்கை என்றால் அரசு கல்வி ஆசிரியர்களுக்கு தான் சலுகைகள் அதிகம் அனால் அங்கு தான் தரம் ரொம்ப குறைவு. இதற்கு காரணங்களாக நான் கருதுவது 
  • மோசமான கல்வி தரம்
  • கேள்வி கேட்க ஆள் இல்லை 
  • ஆசிரியர் பனி நியமனத்தில் உள்ள மோசடி 
  • ஏழை மாணவர்கள் படிபதினால் உள்ள மெத்தனம் 
எனக்கு தெரிந்த சில அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் படம் நடத்துவதே கிடையாது, ஆனால் தனியார் பயிறிசியில் முனைப்பாக உள்ளனர். இதற்கு தீர்வாக நான் கருதுவது 
  1. இலவசங்களை நீக்கி விட்டு, 10 KM ஒரு அரசு பள்ளி அமைப்பது.
  2. ஆசிரியர் பனி நியமனத்தை சீர்படுத்தி, தகுதியான ஆசிரியர்களை நியமிப்பது.
  3. சமச்சீர் கல்வியை அமல் படுத்துவது .
  4. தலைமை ஆசிரியர்களை, பள்ளியின் சாதனை சார்ந்த சம்பளம் அளிப்பது.
  5. கல்வி ஒரு வியாபாரம் ஆகிவிட்ட நில்லையில் அதை ஒப்பு கொண்டு அதில் வரும் வருமானத்தை வரி விதிப்பது. 
  6. SEBI, TRAI, IRDA போன்ற அமைப்பை ஏற்படுத்தி முறை படுத்துவது. 
  7. அரசு வேளையில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை கட்டயமாக அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவது அல்லது 
  8. அரசு பள்ளியின் தரம் உயரும் வரை ஒரு 10 வருடங்களுக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் கட் ஆப் மார்க்கில் அதிகமாக கொடுப்பது அல்லது
  9. அரசு பள்ளிளியில் சேர்க்கும் மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரி விலக்கு அளிப்பது போன்ற வற்றை செய்தால் அரசு பள்ளியின் தரம் உயர வாய்ப்பு இருக்கிறது 

Do you like it? If yes don't forget to vote for it.

1 comment:

  1. 5,8 & 9 - romba nyayamana point, athulayum 5th romba romba nyayam.. papom.. what's in store for future Indian students - Nithya.

    ReplyDelete