Thursday, August 6, 2009

ஒரு பெரிய சிறு கதை

நான் ஆனந்த் , என் ஊரு கோபி ஒரு அழகான கிராமம். என் அப்பா பேரு ராஜு, விவசாயம் தான் தொழில். அந்த காலத்து SSLC இப்படி தான் அம்மா அப்பாவ பத்தி சொல்வாங்க, படிக்க வசதி இல்லாததால சின்ன வயசுல இருந்தே அப்பா விவசாயம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு. அம்மா மழைக்காக கூட ஸ்கூல் பக்கம் போகலைனு சொன்னா அது பொய். காலைல ஏழு மணிக்கே ஸ்கூலுக்கு போய்டுவாங்க பொழுது சாஞ்சதுக்கு அப்பறம் தான் வீட்டுக்கு வருவாங்க. ஸ்கூல்ல சுத்தி முள்ளு காடு, வெறகு வெட்ட தான் அம்மா போவாங்க, படிக்க இல்ல.

சொந்தமா நிலம் இருந்ததால அதுலயே சின்னதா ஒரு ஓட்டு வீடு கட்டினாங்க. அங்க தான் நானும் என் அண்ணனும் பிறந்தோம். எனக்கும் அண்ணனுக்கும் ஏழு வயசு வித்தியாசம். ஸ்கூலுக்கு போய்ட்டு வந்த மத்த நேரம் எல்லாம் வயல்ல தான் இருப்போம். ரொம்ப கஷ்டப்பட்டு தான் அப்பா எங்கள படிக்க வச்சாரு. அண்ணன் சுமாரா படிச்சு பாலிடெக்னிக் காலேஜ்ல சேந்து படிச்சான், படிச்சு முடிச்சதும் எங்க ஊர்லயே கார் சர்வீஸ் சென்டெர்ல வேலை கெடச்சுது.

நான் ஸ்கூல்ல நல்லா படிப்பேன், கணக்கு வாத்தியார எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரு, அடிக்கவே மாட்டாரு. என் அப்பாவ போலவே ரொம்ப நேர்மயனவரு அதுனாலயே அவர நான் அப்பானு தான் கூப்பிடுவேன். ஒரு நாள் நெஞ்சு வலிக்குதுனு சொன்னாரு, அப்படியே மயக்கம் போட்டு விழுந்து இறந்துட்டார். ரெண்டு நாள் அழுதுட்டே இருந்தேன். அம்மா தான் ஆறுதல் சொல்லிட்டு இருந்தாங்க.

அதுக்கப்புறம் நானும் நல்லா படிச்சு ஸ்கூல்லயே முதல் மாணவனா மார்க் வாங்கினேன். இன்ஜினியரிங் படிக்கணும்னு தான் எனக்கு ரொம்ப ஆசை, அப்பாவுக்கும் அது தெரியும். சென்னைக்கு போய் படிக்கணும்னா ரொம்ப செலவு ஆகும் அதனால எங்க ஊருக்கு பக்கத்துலயே ஒரு காலேஜ் இருந்தது அங்க ப்ரீ சீட் கெடச்சுது. வருசத்துக்கு பத்தாயிரம் பணம் கட்டணும், அண்ணன் வேலைக்கு போறது ரொம்ப உதவியா இருந்தது அப்பாவுக்கு. அதனால நிலத்த அடமானமா வச்சு என் படிப்புக்கு காசு வங்கினாங்க. என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, " குடும்பத்துல ஒருத்தருக்கு கஷ்டம்னா எல்லாரும் அத பங்கு போடணும்டா" அப்படின்னு அப்பா சொன்னாரு.


கனவுகளோட காலேஜ்க்கு முதல் நாள் கிளம்பினேன், எங்க அம்மா எனக்கு புது செருப்பு குடுத்தாங்க " பழைய ரப்பர் செருப்பையே எவ்ளோ நாளைக்கு தான் போடுவே, இத வச்சுக்கோ கண்ணு". காலேஜ் வீட்ல இருந்து பத்து கிலோ மீட்டர், பஸ் புடிச்சு போய்ட்டு வரணும். முதல் நாள் பயமாவும் இருந்தது சந்தோஷமாவும் இருந்தது. நான் படிச்சது தமிழ் மீடியம் இங்க எல்லாம் இங்கிலீஷ் தான். எப்படி சமாளிக்க போறோமோன்னு நெனச்சுட்டே போனேன்.


இங்கிலீஷ் ரொம்ப கஷ்டமா இருந்தது, பாடம் புரியாது, பிரண்ட்ஸ் கிட்ட தினமும் கேட்டு தெரிஞ்சுப்பேன். மாடல் டெஸ்ட் வெச்சாங்க அதுல கணக்கு தவிர எல்லாத்துலயுமே பெயில். வீட்டுக்கு போய் அழுதுட்டே இருந்தேன், அம்மா தான் விடிய விடிய ஆறுதல் சொல்லிட்டே இருந்தாங்க. அதுக்கு அப்பறம் எனக்கு இங்கிலீஷ் பழகிடுச்சு. ரொம்ப நல்லா படிக்கலைனாலும் ஓரளவுக்கு படிச்சு பாஸ் பண்ணிட்டேன். காலேஜ் முடிக்கும் முன்னாடியே வேலை கெடச்சிருச்சு, பதிநஞ்சாயிரம் சம்பளம், சென்னைல வேலைனு சொன்னாங்க. ரெண்டு வருசத்துல கடனை அடைச்சிடலாம்னு நெனச்சேன்.



சென்னைக்கு வந்து திருவல்லிகேணில தங்கினேன் மாசம் ரெண்டாயிரம் வாடகை, சாப்பாடு செலவு போக மாசம் பத்தாயிரம் வீட்டுக்கு அணுப்பனும்னு முடிவு பணினேன். முதல் நாள் கம்பெனிக்கு போனேன், என போலவே இருபது பேரு வந்திருந்தாங்க. எல்லாரும் ஒரு பெரிய ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். எங்க சேர்மன் வந்தாரு, அப்பாவ விட பதினஞ்சு வயசு அதிகமாவே இருக்கும். ஒரு மணி நேரம் பேசினாரு, " கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கறத விட நேர்மையா உழைத்து சம்பதிக்கணும்ணு சொன்னாரு", அவரு பேச பேச அவர் மேல எனக்கு இருந்த மரியாதை , அப்பா மாதிரியே இருக்காருன்னு மனசுக்குள்ள நெனச்சுட்டேன். " நாம ஒரு குடும்பம், ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா எல்லாரும் அதுல பங்கு எடுத்துக்கணும் " அப்படின்னு சொன்னாரு, "அப்பாவே தான்" மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.


ஊருக்கு போனேன், "இனிமேல் அம்மா வேலைக்கு போகாத மா" அப்படின்னு சொல்லிட்டேன். உங்க கம்பெனில இருந்துதான் ஏதோ வந்திருக்குனு சொல்லி ஒரு புக்க குடுத்தாங்க " வாழ்கை வட்டம்" அதுல எங்க கம்பெனி செஞ்ச நல்ல திட்டங்கள் பத்தி ஒரு கட்டுரை எழுதிருந்தாங்க. அனாதை ஆசிரமத்துக்கு அவங்க செய்யும் உதவிகள் என்னை ரொம்ப நெகிழ வச்சுது. ரொம்ப வருசத்துக்கு அப்பறம் எங்க சேர்மன் எனக்கு அப்பாவா தெரிஞ்சாரு. கம்பெனில எல்லாரும் அவர பேரை சொலித்தான் கூப்பிடுவாங்க ஆனா நான் மட்டும் சேர்மன்னு தான் சொல்வேன்.

திடிர்னு ஒரு நாள் கம்பெனி நஷ்டத்துல போகுது அதுக்கு காரணம் நான் வேலை செய்யும் டிவிசன் தான் காரணம் அதனால எங்க டிவிசன்ல இருக்கறவங்களுக்கு மட்டும் 15% சம்பளம் குறைக்கறதா சொன்னாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, கடனை எப்படி அடைக்க போறோம் அப்படின்னு நெனச்சுட்டே சாப்பிட போனேன். சேர்மன் கிட்ட இத பத்தி கேக்கணும், அவரு நல்ல முடிவா சொல்லுவாருன்னு நம்பினேன், அவருக்கு ஒரு ஈமெயில் அனுபினேன். பதில் வந்தது "உங்க டிவிசன்கு வேலை நெறைய வரல, அதுனால எங்களால சம்பளம் குடுக்க முடியாது".

ஊருக்கு நைட் கெளம்பி போனேன், அப்பாவ பார்க்கவே கஷ்டமா இருந்தது. தயங்கி தயங்கி சொன்னேன் " அப்பா என்னால இனிமேல் மாசம் ஆறாயிரம் தான் குடுக்க முடியும் " சொலிட்டு தலைய குனிஞ்சுடேன். எங்க அம்மா " பரவா இல்ல, நான் வீட்ல சுமா தானே இருக்கேன், நான் வேலைக்கு போறேன்னு" சொன்னாங்க. அப்பா "வருத்த படாத ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா எல்லாரும் அதுல பங்குஎடுதுகனும்" அப்படின்னு சொன்னாரு. இது தான் குடும்பம்...

5 comments: